அந்த அழகே பொறாமை படும் பேரழகி ” kaniha hot Video !

Author: Udayachandran RadhaKrishnan
5 July 2022, 10:41 pm

எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா. தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடுமென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை. இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் கடந்த வருடம் வெளியாகி வைரல் ஆகியது. தற்போது கோப்ரா படத்தில் ஓரிரு காட்சிகளில் நடித்துள்ளார். மேலும் இவர் தற்போது எதிர்நீச்சல் என்னும் சீரியல் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் அவ்வபோது வந்து செல்லும் கனிகா, தற்போது சீரியலுக்காக பட்டுப் புடவையில் மல்லிப்பூ சூடி எடுத்துக்கொண்ட Video ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

அதிலும் இவரின் புன்சிரிப்பை பார்த்த ரசிகர்கள் சிலர், “மல்லிப்பூ வெச்ச குத்துவிளக்கு..” என்று வர்ணித்து வருகின்றனர்.

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!