அதிக லாபம் கொடுத்த ஒரே இந்தி படம்… பாலிவுட்டையே ஆட்டி படைத்த அட்லீ!

Author: Shree
10 October 2023, 4:06 pm

தமிழ் சினிமாவின் இளம் ஹிட் இயக்குனரான அட்லீ ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் ஹிட் திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றார். தற்போது பாலிவுட் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை வைத்து ஜாவான் படத்தை இயக்கினார்.

இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்தார் . இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்தார்.பிரமாண்டமாக உருவாகிய ஜவான் படம் உலக அளவில் நல்ல கலெக்ஷனை அள்ளியுள்ளது.

சுமார் ரூ. 300 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் இதுவரை ரூ.1,117 கோடிக்கு வசூல் ஈட்டியுள்ளது. இது அட்லீயின் கெரியரில் மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது. இந்த மாபெரும் வெற்றியால் அட்லீ கொஞ்சம் மிதப்பில் சுற்றி திரிகிறாராம். ஓவராக சீன் போடுகிறார் என்று கூட செய்திகள் வெளியானது.

இருக்காதா பின்ன? அறிமுகம் இயக்குனர் என்பதிலே இவ்வளவு பெரிய சாதனை படைத்தால் கொஞ்சம் அகம்பாவம் இருக்கத்தான் செய்யும். இப்படத்தின் மாபெரும் வசூலில் இருந்து கிட்டத்தட்ட ரூ. 480 கோடி வரை தயாரிப்பாளருக்கு ஷேர் கிடைத்துள்ளது. இதன்மூலம் ரூ. 730 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இதுவரை எந்த ஒரு இந்தி படத்திற்கும் இவ்வளவு பெரிய வருவாய் கிடைத்தது இல்லை. ஜவான் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 350 கோடி தான். ஆக சுமார் ரூ. 380 கோடிக்கு லாபம் மட்டுமே அள்ளியுள்ளார் தயாரிப்பாளரான ஷாருக்கான். இந்து பாலிவுட்டின் மிகப்பெரிய சாதனை என பேசிக்கொள்கின்றனர்.

  • kamal haasan not invited for waves 2025 கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!