இனி டூயட் எல்லாம் இல்ல… சூப்பர் ஸ்டாருக்கு வில்லியாகும் காஜல் அகர்வால்..!

Author: Vignesh
10 October 2023, 3:21 pm
kajal aggarwal- updatenews360
Quick Share

பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார். அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார்.

kajal aggarwal - updatenews360

பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது. சமீபத்தில் இவரின் ஹே சினாமிகா படம் வெளியாகி சரியா போகவில்லை.

kajal aggarwal - updatenews360

சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் காஜல் அகர்வாலுக்கு ஒரு மகனும் உள்ளார். தற்போது குழந்தை பெற்ற பிறகும் கூட உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வால் மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

kajal aggarwal - updatenews360

பல படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால் தற்போது வில்லியாக புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அந்த படத்தில் ஹீரோவாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு தான் நடித்த இருப்பதாகவும், ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ளதாகவும், தகவல்கள் வெளியானது. ஏற்கனவே, ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த மகதீரா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த காஜல் தற்போது அது ராஜமௌலி இயக்கத்தில் வில்லியாகவும் நடிக்க உள்ளார்.

aishwarya rai-updatenewws360

காஜல் அகர்வால் நடிக்க இருந்த இந்த வில்லி ரோலில் முதலில் ஐஸ்வர்யா ராய் தான் படக்குழு நடிக்க வைக்க முயற்சி செய்ததாகவும், ஆனால் அவர் நடிக்க முடியாமல் போக அவருக்கு பதிலாக காஜல் அகர்வால் கமிட் செய்தனர். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 288

0

0