ரஜினிக்கு நான் ஜோடியா?.. நடிக்க மறுத்த ஜெயலலிதா; ஓ… இது தான் விஷயமா..!

Author: Vignesh
26 February 2024, 12:42 pm
Jayalalitha
Quick Share

நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிரியாக பார்த்தாரா என்பது குறித்து பயில்வான் ரங்கநாதன் தெரிவித்து இருக்கிறார். பயில்வான் ரங்கநாதன் பிரபல பத்திரிகையாளராகவும் நடிகராகவும் இருந்தது.

சினிமாவை பொருத்தவரை எம்ஜிஆர் சிவாஜி காலம் முதல் தற்போது வரை நன்கு அறிந்தவர் பயில்வான் ரங்கநாதன். சினிமா பிரபலங்களின் ரகசியங்களையும் சினிமாவில் உள்ள நல்லது கெட்டதுகளையும் தெரிந்துள்ள பயில்வான் அவ்வப்போது தான் அறிந்த தகவல்களை வீடியோவாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

rajini jayalalitha -updatenews360

அந்த வகையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் ஜெயலலிதாவுக்கும் என்ன பிரச்சனை இருந்தது என்பது குறித்தும், ரஜினிகாந்தை ஏன் ஜெயலலிதாவை எதிரியாக பார்த்தாரா என்பது குறித்து வீடியோ வெளியிட்டு இருந்தார்.

அதில் பயில்வான் ரங்கநாதன் பேசி இருப்பதாவது, எம்ஜிஆருக்கு பிறகு தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக ரஜினிகாந்த் இருக்கிறார். 72 வயதாக ரஜினிகாந்த் இருந்த போதும், இன்னும் ஹீரோவாக நடிக்கும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான்.

rajini jayalalitha -updatenews360

இவர் ஆரம்பத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் கே.பாலச்சந்தர் மூலம் அறிமுகமான நடிகர் ரஜினிகாந்த் பின்னர் சூப்பர் ஸ்டார் ஆகாக ஜெலித்து கொண்டு இருக்கிறார். இயக்குநர் கே பாலச்சந்தர் ரஜினிகாந்தையும் கமல்ஹாசனையும் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர். ரஜினிகாந்த், எஸ்பி முத்துராமன், பஞ்சு அருணாச்சலம், இளையராஜா ஆகியோரின் கூட்டணி சக்ஸஸ் கூட்டணி தான். இவர் ஜெயலலிதா சினிமாவை விட்டு விலகிய பிறகு துக்ளக்கில் கட்டுரை எழுதி வந்தார்.

rajini jayalalitha -updatenews360



இதனிடையே, ஜெயலலிதா முதல்வர் ஆன பிறகு அதிக கெடுபிடி காட்டி வந்தார். அவர் கார் சாலையில் செல்லும் போது சாலைகளில் வாகனங்கள் இரு புறமும் நிறுத்தப்படும் என்றும், வாகனங்களை ஆஃப் செய்ய வேண்டும் என போலீசார் மிரட்டுவார்கள் எனவும், ஜெயலலிதாவின் இந்த போக்கு ரஜினிக்கு பிடிக்கவில்லையாம். இதனிடையே, ரஜினிகாந்த் எப்போதும் சோளா ஹோட்டலில் இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு நடந்து செல்வது வழக்கம் எனவும், அப்படி, போயஸ் கார்டன் பகுதியில் உள்ளே போலீசார், ஜெயலலிதான் வீடு இருப்பதால் ரஜினியை நடந்து செல்லக் கூடாது என டார்ச்சர் செய்து வந்ததாகவும்,

rajini jayalalitha -updatenews360

இதனால் ரஜினிகாந்த் மன உளைச்சலுக்கு ஆளானார். இருப்பினும் அதை தாங்கி கொண்டு அடுத்த நாள் ஜெயலலிதாவுக்கு போன் போட்டு போலீசார் தன்னை டார்ச்சர் செய்வதை கூறியதாகவும், அதனை தவறாக எடுத்துக்கொள்ளாத ஜெயலலிதா, அவர் வீடும் இங்கேதான் இருக்கிறது. அவர் பாட்டுக்கு நடந்து செல்கிறார், அவரை ஏன் தொல்லை செய்கிறீர்கள்? அவரை இனிமேல் எதுவும் கேட்க கூடாது என போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இதனிடையே அந்த சமயத்தில், ஜெயலலிதா ஆட்சி நடத்திய விதம் ரஜினிக்கு பிடிக்கவில்லை என்பதால், மூப்பனார்- திமுக கூட்டணிக்கு ரஜினிகாந்த் ஆதரவு கொடுத்தார் . தமிழ் நாட்டில் மீண்டும் ஜெயலலிதா முதல்வரானால் காப்பாற்ற முடியாது என்றும் தெரிவித்தார்.

rajini jayalalitha -updatenews360



இதனை கேட்ட மக்களும் ஜெயலலிதாவை முதல்வர் பதவியில் இருந்து இறக்கியது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜெயலலிதா ரஜினிகாந்தை எதிரியாக நினைக்கவில்லை என்றும், ரஜினியின் மூத்த மகளின் திருமணத்திற்கு அழைத்ததும் முதல் ஆளாய் போய் ஜெயலலிதா நின்றார். ஜெயலலிதா தாலி எடுத்து கொடுக்க ரஜினி மகளின் திருமணம் சிறப்பாய் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும், சமீபத்தில் யார் என்ன சொன்னார்களோ தெரியவில்லை என்றும், அந்த சமயத்தில் ரஜினிகாந்த் திடீரென அறிக்கை வெளியிட்டு இருந்தார், கருத்து வேறுபாடுகள் இருந்தது உண்மைதான் எனவும், இருப்பினும் தனது மகளின் திருமணத்திற்கு முதல் நபராக ஜெயலலிதா வந்தார் என ரஜினிகாந்த் பாராட்டினார்.

rajini jayalalitha -updatenews360


திமுக ஆட்சி நடக்கும்போது ரஜினிகாந்த் ஜெயலலிதாவை பாராட்டியுள்ளார். ஜெயலலிதாவும் ரஜினியை எப்போதும் எதிரியாக நினைக்கவில்லை என்றும், மூத்த சகோதரி என்ற முறையில் ரஜினி மகளின் திருமணத்தை ஜெயலலிதா நடத்தி வைத்தார் .

மேலும், ஜெயலலிதா எப்போதுமே தனது புகுந்த வீடு அரசியல், தாய்வீடு சினிமா என்று தெரிவிப்பார். அதை போன்றே தமிழ் சினிமாவுக்கு ஏராளமான நன்மைகளை ஜெயலலிதா செய்துள்ளார். ரஜினிகாந்தும் அதன் பிறகு ஜெயலலிதாவை விமர்சிக்கவில்லை என தெரிவித்தார்.

rajini jayalalitha -updatenews360

நடிகை ஜெயலலிதா அரசியலுக்கு வருவதற்கு முன்பு சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தபோதே மிகவும் தைரியமான பெண்மணியாகவே இருந்து இருக்கிறார். பொதுவாக ரஜினிகாந்துக்கும் ஜெயலலிதாவுக்கும் பிரச்சினை இருந்ததாக ஒரு தகவல் எப்போதுமே கோலிவுட்டில் முணுமுணுக்கப்பட்டு தான் வந்தது. அதாவது, ரஜினியின் ‘பில்லா’ படத்தில் ஸ்ரீப்ரியா, பிரவீணா, தேங்காய் சீனிவாசன், ஆர்.எஸ்.மனோகர், மனோரமா, கே.பாலாஜி, ஏவி.எம்.ராஜன் முதலானோர் நடித்தார்கள்.

முன்னதாக, இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஜெயலலிதாவை நடிக்க வைக்க அழைத்தார் தயாரிப்பாளர் கே பாலாஜி. கதையை கேட்டுவிட்டு முதலில் சமாதித்த அவர் சில நாட்கள் கழித்து வேண்டாம் சார்.. நான் இதுல நடிக்கிறதா இல்ல வேணும்னா ஸ்ரீபிரியாவை இந்த கேரக்டருக்கு போட்டுக்கோங்க சார் என்று மறுத்துவிட்டாராம்.

billa

இதனிடையே, “எனக்கு பணம் முக்கியம் என்று நினைத்திருந்தாலோ, அப்போது பெரிய நடிகராக வளர்ந்துவிட்ட ரஜினியுடன் நடிக்கலாமே என்று நான் ஆசைப்பட்டிருந்தாலோ நடித்திருப்பேனே.. ஆனால், எனக்கு நடிக்க விருப்பமில்லை மறுத்துவிட்டேன்” என்று ஜெயலலிதா பல வருடங்கள் கழித்து மனம் திறந்து ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதில், விஷயம் என்னவென்றால் ரஜினியுடன் ஜெயலலிதா ஜோடியாக பில்லா படத்தில் நடித்திருந்தால், அந்த படம் இன்னொரு வரலாற்றுப் பதிவாகி இருக்கும் பி லெனின் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் சரத்பாவுடன் ஜெயலலிதா நடித்த நதியை தேடி வந்த கடல் திரைப்படம் நினைவு இருக்கிறதா? இந்த படம் 1980 ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கலுக்கு வெளியானது.

Jayalalitha

இதுதான் ஜெயலலிதா நடித்த கடைசி படம். ஒருவேளை ஜெயலலிதா ரஜினியுடன் நடிக்க சம்மதித்து நடிக்கவும் செய்திருந்தால் 1980-ம் ஆண்டு பொங்கலுக்குப் பிறகு அதே வருடத்தில் அதே மாதத்தில் ஜனவரி 26 ஆம் தேதி வெளியான பில்லா படம் ஜெயலலிதாவின் கடைசி படமாக இருந்திருக்கும். ஏனோ, தெரியவில்லை ரஜினியும் ஜெயலலிதாவும் இணைந்து நடிப்பது நடக்காமலே போய்விட்டது.

bayilvan ranganathan

மேலும், ஜெயலலிதா அரசியலுக்கு வந்ததால் மீண்டும் சினிமாவில் நடிக்க மறுத்ததாகவும், மற்றப்படி ஜெயலலிதாவுக்கும் ரஜினிகாந்துக்கும் பிரச்சனை என்பது உண்மையில்லை என பயில்வான் ரங்கநாதன் விலாவரியாக பேசியிருக்கிறார் .

Views: - 98

0

0