விஜய் மீது இவ்வளவு வெறுப்பா? திருப்பதி கோவிலில் காண்டான ஜெயம் ரவி!

Author: Rajesh
11 February 2024, 2:33 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி அவரது அண்ணன் இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் இருவருக்குமே மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் பிறகு சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், எம். குமரன் சன் ஆஃவ் மகாலஷ்மி, சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், பேராண்மை, எங்கேயும் காதல், தனி ஒருவன் உள்ளிட்ட பல்வேறு தொடர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் தந்தை எடிட்டர் மோகன் எடிட்டர் பணியையும் தாண்டி திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக மாறி தெலுங்கு , தமிழ் , கன்னடம் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் வரலட்சுமி என்ற பெண்ணை விரும்பி திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்கள் தான் மோகன் ராஜா, ஜெயம் ரவி.

இதில் மோகன் ராஜா இயக்குனராகவும் ஜெயம் ரவி முன்னணி நடிகராகவும் இருந்து வருகிறார். ஜெயம் ரவி ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஆரவ், அயான் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி மற்றும் குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

Vijay - Updatenews360

அப்போது அவரை சுற்றி வளைத்த பத்திரிகையாளர் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து கருத்து கேட்டதற்கு, கோவிலில் என் படத்தை பற்றிய கேள்வி ஏதேனும் இருந்தால் மட்டும் கேளுங்க என மீண்டும் மீண்டும் கூறி ஒரு வார்த்தை கூட ” வரட்டும், வந்தால் நல்லது தானே, ஒரு மாற்றம் வேண்டும்” என மற்றவர்கள் கூறியது போல் கூட எதுவுமே கூறாமல் சென்றார். அவரின் இந்த பதில் விஜய் மீது ஏதேனும் வெறுப்பா இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • the reason behind top actors are absent in king kong daughter marriage function ஓடி ஓடி பத்திரிக்கை வச்சி ஒருத்தர் கூட வரல? கிங் காங் வீட்டுத் திருமணத்தில் தலை காட்டாத நடிகர்கள்!