சிவகுமார் குடும்பத்தையே பிரிச்சிட்டேனா? இனிமேல் யாராச்சும் அப்படி சொன்னீங்க…. கொந்தளித்த ஜோதிகா!

Author: Rajesh
19 December 2023, 12:21 pm
jyothika sivakumar
Quick Share

புஷ் புஷ் நடிகையாக கொழுக் மொழுக் அழகியாக அக்கட தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை ஜோதிகா. இந்தி சினிமாவில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த ஜோதிகா வாலி படத்தில் காமியோ ரோலில் நடித்து அறிமுகமானார் .

முதல் படத்திலே நல்ல அறிமுகத்தை பெற்ற அவர் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

முதல் படத்திலே நல்ல அறிமுகத்தை பெற்ற அவர் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

காக்க காக்க படத்தில் நடித்த போது நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். சிவகுமாருக்கு தன் மகன் ஒரு நடிகையை திருமணம் செய்வதில் விருப்பமே இல்லையாம். தன் ஜாதியில் பெண் எடுத்து திருமணம் செய்யவேண்டும் என எண்ணியதாகவும் அது நடக்காததால் மிகவும் வருத்தப்பட்டதாக சிவகுமாரே பேட்டி ஒன்றில் கூட கூறியிருந்தார்.

அதன் பின்னர் தன்னுடைய இளைய மகன் கார்த்திக்கு தன் இஷ்டப்படி தன் சாதிக்கார பேனையே திருமணம் செய்துவைத்து நிம்மதி அடைந்தார். இதையெல்லாம் மனதில் வைத்து சரியான நேரம் பார்த்து பழிவாங்க எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஜோதிகா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

சரி போனால் போகட்டும் என விட்ட சிவகுமாருக்கு மீண்டும் பெரிய இடி கொடுத்தார் ஜோதிகா. ஆம், சூர்யாவை கூட்டிக்கொண்டு தான் பிறந்த மண்ணான மும்பையில் சென்று செட்டில் ஆகிவிட்டார். இதனால் சிவகுமார் செம கோபத்தில் இருக்கிறாராம். இருந்தாலும் அவரால் ஒண்ணுமே செய்யமுடியவில்லையாம். காரணம் சூர்யா ஜோதிகா பேச்சை தட்டாமல் அவர் சொல்வதே மந்திர வாக்காக நினைந்து இந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிவருகிறார். அவரே பட்டு திருந்தினால் தான் வழி பிறக்கும் என்கிறார்களாம் சிவகுமார் வீட்டு உறவுகள்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் மும்பையில் செட்டில் ஆனதன் காரணத்தை கூறிய ஜோதிகா, கடைசி காலத்தில் அம்மா அப்பாவுடன் இருக்கவேண்டும் என ஆசைப்பட்டேன். அதனால் தான் அங்கே செட்டில் ஆனோம் என கூறினார். இந்த காரணத்தை சூர்யா ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அப்போ சூர்யாவின் பெற்றோர்களின் நிலை என்ன? இதே போன்று கார்த்தியின் மனைவியும் நினைந்து அவர்களும் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டால் சிவகுமார் மற்றும் அவரின் மனைவியின் கதி என்ன ஆகுறது? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் கணவரை அழைத்துக்கொண்டு மும்பைக்கு தனிக்குடித்தனம் சென்ற ஜோதிகா சிவகுமார் குடும்பத்தையே பிரிந்துவிட்டார் என வெளியாகும் செய்திகளுக்கு பதிலடி கொடுத்த ஜோதிகா, அப்படியெல்லாம் இல்லை… என் மாமனார் எனக்கு ரொம்ப சப்போர்ட்டிவாக இருப்பார். நான் ஷூட்டிங் செல்லும்போது குழந்தைகளை மறந்து வேளையில் முழு கவனத்தை செலுத்தவேண்டும் என அறிவுரை கூறி அனுப்புவார்.

அதுமட்டும் அல்லாமல் கொரோனா காலகட்டத்தில் என்னுடைய பெற்றோர் மும்பையில் தனியாக கஷ்டப்பட்டார்கள். அத்துடன் அவர்களை அடிக்கடி அங்கு சென்று என்னால் பார்க்க முடியாததால் நான் சூர்யாவிடம் அங்கு சென்று செட்டில் ஆகிவிடலாமா என்று கேட்டேன். அதற்கு அவரும் குடும்பத்துடன் ஆலோசனை செய்து தான் ஓகே சொன்னார். எனவே நான் மும்பைக்கு சென்றதால் எங்களது குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. இனிமேல் தயவுசெய்து யாரும் தேவையில்லாத வதந்திகளை பரப்பவேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

Views: - 333

0

0