அர்ஜென்ட்டா வந்துடுச்சு.. அங்க பாத்ரூம் கூட இல்லை ஷாக் கொடுத்த காஜல் அகர்வால்..!

Author: Vignesh
23 May 2024, 8:30 pm
kajal aggarwal - updatenews360
Quick Share

மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை காஜல் அகர்வால் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்கள் அவரது வெற்றிக்கு பிள்ளையார் சுழி போட்டது. தொடர்ந்து தமிழில் அஜித் , விஜய், தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பெரும் புகழ் பெற்றார்.

kajal aggarwal - updatenews360

மேலும் படிக்க: போட்டி போட்டு அஜித் படத்தின்- OTT ரைட்ஸை தட்டித் தூக்கிய நிறுவனம்.. தல ஃபேன்ஸ் ரெடியா இருங்க..!

தமிழில் சரோஜா, சிங்கம், மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, ஜில்லா, மாரி, விவேகம், மெர்சல் என பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார். தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

kajal aggarwal - updatenews360

மேலும் படிக்க: ஆத்தாடி.. பிரியங்கா சோப்ரா கழுத்தில் இருக்கும் நெக்லஸின் மொத்த மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இதனிடையே பிரபல தொழிலதிபர் கெளதம் கிச்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட காஜல் அகர்வாலுக்கு ஒரு மகன் இருக்கிறான். அவ்வப்போது வெகேஷன் செல்லும்போது விமானநிலையில் மகனுடன் சேர்ந்து மீடியாக்கள் புகைப்படம் எடுக்க அது இணையத்தில் வெளியாகும்.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட காஜல் அகர்வால் ஜோர்டன் நாட்டில் ஒரு படத்தின் படப்பிடிப்பிற்காக சென்றிருந்தபோது, உலகத்தின் முக்கிய அதிசயங்களில் ஒன்றான பெட்ராவில், ஒரு காட்சி படமாக்கப்பட்டு கொண்டுட இருந்தது. அப்போது, அங்கு கழிவறையும் இல்லை. மிகவும் தொலைவில் தான் இருந்தது. அவசரமாக பாத்ரூம் கழிக்க வேண்டிய நிலை வந்ததால், அங்கே உள்ள ஒரு கல்லறையின் அருகே இயற்கை உபாதையை கழித்தேன். இது போன்ற கொடுமைகள் எல்லாம் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது நடக்கும் என டூத் ஆர் டேர் ரவுண்டின் போது வெளிப்படையாக கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் காஜல் அகர்வால் ஆழ்த்தி உள்ளார். பல்வேறு நடிகைகளும் இதுபோல வெளியிடங்களின் படப்பிடிப்பு நடத்தும் பொழுது சரியான பாத்ரூம் வசதி இல்லை என புகார் அளித்துள்ள நிலையில், முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய காஜல் அகர்வாலுக்கு இப்படி ஒரு மோசமான சூழ்நிலை நடந்து இருப்பது பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 77

0

0