உயிரோடு இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?.. கே பாலச்சந்தர் மகளிடம் அப்படி நடந்து கொண்ட கமல்..!
Author: Vignesh23 May 2024, 8:01 pm
உலக நாயகன் கமல் ஹாசன் தமிழ் ,சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் மிகப்பெரிய நடிகராக பெரும் புகழ் பெற்றார். நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல துறைகளில் திறமைசாலியான மனிதனாக ஜெயித்து காட்டுவார்.
திறமை, நடிப்பு என எல்லாவற்றையும் தாண்டி சினிமாவில் சக நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு லீலைகளில் சிக்கி வருகிறார். இரண்டுக்கும் மேற்பட்ட விவகாரத்து , பல நடிகைகளுடன் ரகசிய உறவு என இருந்த கமல் ஹாசன் தற்போது தலைமையில் தான் வாழ்ந்து வருகிறார். வயது 69 ஆகியும் நடிப்பு,தொலைக்காட்சி, அரசியல் என படு பிஸியாக இருந்து வருகிறார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து இளம் ஹீரோக்களுக்கு திகில் கொடுத்து வருகிறார்.
மேலும் படிக்க: சித்தார்த்துக்காக படுக்கையை கூட பகிருவேன்.. சர்ச்சையை கிளப்பிய நயன்தாரா பட நடிகை..!
தற்போது கமல் தமிழ் சினிமாவின் ஆஸ்தான இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் “தக்லைஃப்” படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த கூட்டணி ஏற்கனவே நாயகன் படத்தின் மிகப்பெரிய கிளாசிக் ஹிட் கொடுத்தனர். எத்தனை டான் படம் வந்தாலும் நாயகன் படத்தின் சாயல் இல்லாமல் இருக்காது. எனவே இவர்கள் மீண்டும் இணைந்து பணியாற்றுவதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
மேலும் படிக்க: போதையில் கரெக்டா பண்ண முடியும்.. படுக்கை அறைக்காட்சி குறித்து பேசிய மனிஷா கொய்ராலா…!
இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவலின் படி தக்லைஃப் படத்தில், திரிஷா, கௌதம் கார்த்திக் உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது சொல்ல வரும் விஷயம் என்னவென்றால், கல்கி படத்தில் 15 நிமிடத்திற்கே வரும் காட்சிக்காக கமல்ஹாசன் பல கோடி சம்பளம் வாங்குகிறாராம் கமல். அதாவது ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி வரை அவர் சம்பளம் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் என்னது ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடியா என வாய் பிளந்துள்ளனர்.
மேலும் படிக்க: தாமரை விரியனும்.. பிரபல நடிகையின் தாயார் பளீச் பேட்டி..!(Video)
அன்மையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அந்தணன் சினிமாவில் பிரபலங்கள் ஒரு பெரிய இடத்திற்கு வந்துவிட்டால், பழைய விஷயங்களை மறந்து விடுவார்கள். உதாரணத்திற்கு பாலச்சந்தர் உயிரோடு இருக்கும்போது இந்த திரைத்துறை அவருடைய குடும்பத்திற்கு எப்படி மரியாதை கொடுத்தது, அதை நாம் பார்த்திருப்போம்.
மேலும் படிக்க: போட்டி போட்டு அஜித் படத்தின்- OTT ரைட்ஸை தட்டித் தூக்கிய நிறுவனம்.. தல ஃபேன்ஸ் ரெடியா இருங்க..!
ஆனால், அதே பாலச்சந்தர் மகள் வீட்டில் ஒரு விசேஷம் நடந்தது. அதற்கு அவரது மகள் இன்விடேஷன் கொடுப்பதற்காக ரஜினிகாந்த் வீட்டிற்கு அப்பாயின்மென்ட் வாங்கி இருக்கிறார். உதாரணத்திற்கு, 12 மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்த ரஜினி பாலச்சந்தர் மகள் வீட்டிற்கு வருவதற்கு முன்பே வாசலில் காத்துக் கொண்டு இருந்தார். ஆனால், கமலஹாசன் 12 மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து நாலு மணிக்கு தான் வந்து சேர்ந்தார். கே பாலச்சந்தர் உயிரோடு இருந்திருந்தால் இப்படி செய்திருப்பாரா என்று அந்தணன் தெரிவித்துள்ளார்.
0
0