போதையில் கரெக்டா பண்ண முடியும்.. படுக்கை அறைக்காட்சி குறித்து பேசிய மனிஷா கொய்ராலா…!

Author: Vignesh
26 April 2024, 6:53 pm
manisha koirala-updatenews360
Quick Share

90 மற்றும் 2000ம் காலகட்டங்களில் சூப்பர் ஹிட் நடிகையாக ஜொலித்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. நேபாள-இந்திய நடிகையான இவர், இந்தி , தமிழ் , தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

manisha koirala

மேலும் படிக்க: Night எல்லாம் தூங்கவே விடுவதில்லை.. கணவர் குறித்து வெளிப்படையாக பேசிய சாந்தினி..!

1989ல் வெளிவந்த ஃபெரி பெட்டாலா என்ற நேபாள படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். பின்னர் சௌடாகர் என்ற இந்தி படம் 1991ல் வெளிவந்தது. தமிழில் மணிரத்தினத்தின் பம்பாய் படம் மூலம் அறிமுகமாகி மிகப்பெரிய நடிகையானார். இதை தொடர்ந்து இந்தியன், முதல்வன் உள்ளிட்ட படங்கள் நல்ல வெற்றியை பெற்று கொடுத்தனர்.

manisha koirala

அதன் பின்னர் பாபா , ஆளவந்தான் உள்ளிட்ட படங்கள் மிதமான வரவேற்பையே பெற்றிருந்தது. சினிமாவின் உச்சத்தில் இருந்துக்கொண்டிருந்தபோதே மனிஷா கொய்ராலா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு திரைவாழ்க்கையை இழந்தார். இதனால் சில வருடம் படங்களில் நடிக்காமல் ஆள் அட்ரஸே இல்லாமல் போய்விட்டார்.

manisha koirala-updatenews360

மேலும் படிக்க: அய்யய்யோ.. அந்த ஹீரோயினா வேண்டாம்.. ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தி ஒதுக்கும் விஷால்..!

இந்நிலையில் தனது சினிமா வாழ்க்கை குறித்தும் அதன் அனுபவங்களை குறித்தும் பேசிய மனிஷா கொய்ராலா, நான் படுக்கையறை காட்சிகளில் நடிக்கவே ரொம்ப தயங்குவேன். அந்த நேரத்தில் அதை மறக்க மது அருந்திவிட்டு தான் நடிப்பேன். அதுவே நாளடைவில் பழக்கம் ஆகிவிட்டது. பின்னர் நான் மதுபோதைக்கு அடிமையாகி விட்டேன். அதனால் தான் நான் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டேன். மது தான் என் வாழ்க்கையை சீரழித்துவிட்டது என வேதனையோடு தெரிவித்தார்.

manisha

அதுமட்டுமில்லாமல், இந்த பழக்கம் காரணமாக எனக்கு புற்றுநோய் வந்தது. தற்போது, அதிலிருந்து மீண்டு வந்து நான் மது பழக்கத்திலிருந்து மீண்டு வந்து, தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனவே மதுப்பழக்கம் எதற்கும் ஒரு தீர்வாகாது என நன்கு புரிந்து கொண்டேன் என பேசியுள்ளார். இதனை அடுத்து, ரசிகர்கள் அனைவரும் மதுவினால் ஏற்படும் தீமையை மிக சிறப்பான முறையில் மனிஷா கொய்ராலா விளக்கி இருப்பது பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் என சொல்லி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். எனவே, இதுபோல தீய பழக்கங்களில் தன்னை செலுத்தி வரும் இளைஞர்கள் மனிஷா கொய்ராலாவின் வாழ்க்கையை முன் உதாரணமாக கொண்டால் கட்டாயம் இது போன்ற கெட்ட நடவடிக்கைகளில் இருந்து வெளியே வந்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முயற்சி செய்யலாம்.

Views: - 69

0

0

Leave a Reply