மன விரக்தியால் கஜோல் எடுத்த முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Author: Vignesh
9 June 2023, 5:40 pm
kajol updatenews360
Quick Share

மின்சார கனவு என்ற ஒரே படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக ஜொலித்தவர் தான் கஜோல். இவர் தனுசுடன் வேலையில்லா பட்டதாரி 2 என்ற படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருப்பார்.

kajol updatenews360

பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அழகான இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

kajol updatenews360

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கஜோல் திடீரென அறிவித்த ஒரு முடிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கஜோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏற்கனவே பதிவிட்ட அனைத்து பதிவுகளையும் நீக்கி உள்ளார்.

kajol updatenews360

இந்நிலையில் கஜோல் தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வாழ்க்கையில் மிக கடினமான நேரத்தை எதிர்கொண்டு வருவதாகவும், சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருக்க போவதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றன.

kajol updatenews360

மேலும், கஜோல் இது குறித்து எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என்பதால் சிலர் இதனை இவரின் அடுத்து வரவிருக்கும் வலைதொடரான “தி குட் வைப் – அமெரிக்க கோர்ட்ரூம்” நாடகத்தின் ஹிந்தி படைப்புக்கான விளம்பர உத்தியாக இருக்கும் என்று தெரிவித்து வருகின்றன.

Views: - 159

0

1