பெங்களூருவில் தக் லைஃப் செய்த கன்னட அமைப்பினர்.. கமல் பேனர் கிழிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan28 May 2025, 10:54 am
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தக் லைஃப். வரும் ஜூன் 5ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் படக்குழுவுடன், கன்னட நடிகர் சிவராஜ்குமார் பங்கேற்றார்.
இதையும் படியுங்க: உடலுறவுக்கு அழைத்த திருநங்கை… நள்ளிரவில் இளைஞருக்கு நேர்ந்த கதி : தலைநகரத்தில் அதிர்ச்சி!
அப்போது நிகழ்ச்சியில் பேசிய கமல், கன்னட நடிகர் சிவராஜ்குமார் குடும்பம் குறித்து பேசினார். ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம், அதனால்தான் அவர் இங்கு வந்துள்ளார்.
அதனால்தான் என்னுடைய பேச்சை தொடங்கும் போது, உயிரே உறவே தமிழே என தொடங்கினேன். தமிழில் இருந்து உருவானதுதான் கன்னடம், அதை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள் என கூறினார்.

கமல்ஹாசனின் இந்த பேச்சு கன்னட ரக்ஷன வேதிகே உள்ளிட்ட அமைப்புகளை கொந்தளிக்க செய்துள்ளது. தமிழ் பிறந்த பிறகுதான் கட்டனம் பிறந்தநது, கன்னடத்தை விட தமிழ் சிறந்தது என கமல் கூறியுள்ளார்,. கமலை நாங்கள் எச்சரிக்கிறோம்,. கர்நாடாகாவில் வியாபாரம் வேண்டும் ஆனால் கன்னடத்தை அவமதிக்கிறீர்களா? உங்கள் மீது கருப்பு மை ழுச நாங்க தயாரா இருந்தோம். அதற்குள் நீங்கள் எங்கள் மாநிலத்தை விட்டு ஓடிவிட்டீர்கள், உங்களை எச்சரிக்கிறோம், உங்கள் படம் கர்நாடகாவில் தடை செய்யப்படும், எங்கள் மக்களுக்கு எதிராக பேசினால் போராட்டம் நடத்தப்படும் என கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் தலைவர் பிரவீன் ஷெட்டி கூறியுள்ளார்.