ரஜினிக்கு குடை பிடித்த அமைச்சர்… சூப்பர் ஸ்டாருக்கு கிடைத்த ராஜ மரியாதை!!!!

Author: Vignesh
2 November 2022, 10:00 am
rajini-updatenews360
Quick Share

நடிகர் ரஜினிகாந்திற்கு கர்நாடக மாநில அமைச்சர் ஒருவர் குடைபிடித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

கர்நாடக மாநிலம் உதயமான தினமான நேற்று கர்நாடக ராஜயோத்சவா என்கிற நிகழ்ச்சி அரசு சார்பில் நடத்தப்பட்டது. பெங்களூருவில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருதும் வழங்கப்பட்டது.

rajini-updatenews360

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் புனீத் ராஜ்குமாரின் மனைவியிடம் கர்நாடக ரத்னா விருதை வழங்கினர்.

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக இருந்தாலும், அவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் அவர் மீது அம்மாநில மக்கள் இன்றளவும் அன்பு செலுத்தி வருகின்றனர். நேற்று நடந்த விழாவில் ரஜினிகாந்த் கன்னடத்தில் பேசியதை கேட்டு உற்சாக மடைந்த ரசிகர்கள் விசிலடித்து ஆரவாரம் செய்தனர்.

rajini-updatenews360

முன்னதாக இந்த விழாவில் கலந்துகொள்வற்காக நடிகர் ரஜினி பெங்களூருவுக்கு தனி விமானத்தில் சென்றார். அப்போது விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் விமான நிலையத்திற்கே வந்து ரஜினியை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

rajini-updatenews360

அதுமட்டுமின்றி நேற்றைய விழாவின் போது திடீரென மழை பெய்தது. இதில் ரஜினிகாந்த் நனைந்துவிடக் கூடாது என்பதற்காக அவருக்கு கர்நாடக அமைச்சர் முனிரத்னா என்பவர் அவருக்கு குடைபிடித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. அதுமட்டுமின்றி அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை ரஜினியை நேரில் அழைத்து அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடி அவருக்கு ராஜ மரியாதை கொடுத்த வீடியோவில் சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகின்றன.

இதைப்பார்த்த ரசிகர்கள் ரஜினிகாந்த் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆளுமை என்பதற்கு இந்த புகைப்படங்களும், வீடியோக்களே சான்று என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Views: - 287

0

0