ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…

Author: Prasad
4 April 2025, 6:03 pm

அபார முயற்சி, ஆனால்?

ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த பெருமைக்குரியவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். 2014 ஆம் ஆண்டு சௌந்தர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் இந்தியாவின் முதல் முழுநீள மோஷன் கேப்சர் திரைப்படமாக வெளிவந்தது “கோச்சடையான்”. 

kochadaiiyaan movie rerelease soon in theatres

இத்திரைப்படம் அறிவிக்கப்பட்டபோது இந்தியா முழுவதுமுள்ள ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். ஆனால் இத்திரைப்படம் வெளிவந்த பிறகு இத்திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலருக்கும் இத்திரைப்படத்தின் அனிமேஷன் ஏற்புடையதாக இல்லை. இதனால் இத்திரைப்படம் அதிகளவு வரவேற்பை பெறவில்லை. 

மறுவெளியீடு..

இந்த நிலையில் “கோச்சடையான்” திரைப்படத்தை ரீரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளதாம். அதாவது பல காட்சிகளை AI தொழில்நுட்பத்தின் மூலம் மெறுகேற்றப்பட்டு விரைவில் மறுவெளியீடு காண உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

kochadaiiyaan movie rerelease soon in theatres

சௌதர்யா ரஜினிகாந்த் இயக்கிய இத்திரைப்படத்தின் கதையை கே.எஸ்.ரவிக்குமார் எழுதியிருந்தார். இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்திருந்த நிலையில் சரத்குமார், ஷோபனா, ஆதி, ருக்மிணி, நாசர் போன்றோர் நடித்திருந்தனர். குறிப்பாக நாகேஷிற்கு  அனிமேஷன் தொழில்நுட்பத்தின் மூலம் உயிர்கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!