நடிகர் மனோபாலாவின் இறுதி நிமிடங்கள்.. அப்பாவிற்கு மகன் பாடிய கடைசி பாடல்..! (வீடியோ)

Author: Vignesh
9 May 2023, 6:30 pm

இயக்குநர், குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் மனோபாலா. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் 700 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், இயக்குநர் பாரதிராஜாவிடம் ஆரம்ப காலதில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

manobala-updatenews360

1982ல் ஆகாய கங்கை எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின்னர், ரஜினியின் ஊர்க்காவலன், பிள்ளை நிலா, சிறைபறவை, என் புருஷன்தான் எனக்கு மட்டும் தான் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்ளை இயக்கியுள்ளார். சந்திரமுகி, அரண்மனை, துப்பாக்கி, கலகலப்பு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

actor-manobala - updatenews360

தற்போது விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வந்தார். மேலும், சதுரங்க வேட்டை உள்ளிட்ட 3 திரைப்படங்களை தயாரித்துள்ளார். குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர் தனது யூடியூப் சேனல் மூலம் பிரபலங்களை பேட்டியெடுத்து வந்தார்.

manobala-updatenews360

இந்த நிலையில், சமீபத்தில் லேசான மாரடைப்பு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தற்போது ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார்.

manobala-updatenews360

இந்த நிலையில் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னையில் உள்ள அவரது வீட்டில் மனோபாலாவின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

manobala-updatenews360

இந்நிலையில், மனோபாலாவின் இறுதி நிமிடங்களை தற்போது அவரது youtube சேனலில் வெளியிட்டு உள்ளனர். அதில் மனோபாலாவின் மகன் அப்பாவை தேற்றுவதற்காக பாட்டு பாடி உள்ளார். Manobala’s last moments என குறிப்பிட்டு அந்த வீடியோவை பதிவிட்டு இருக்கின்றனர். மனோபாலாவுக்கு ஒருவர் உணவு, தண்ணீர் ஊட்டி விடுகிறார். இதை பார்த்து ரசிகர்கள் கலக்கம் அடைந்து உள்ளனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?