மரண படுக்கையில் நண்பனின் கடைசி ஆசை… அற்ப புத்தியால் அலட்சியம் செய்த இளையராஜா!

Author: Shree
9 May 2023, 6:38 pm
ilayaraja
Quick Share

தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்குவதில் அவர் ஞானி.

இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜா பேச ஆரம்பித்தாள் எல்லோரும் முகம் சுளிக்கப்படி அடுத்தவர்களை பற்றி மோசமாக மரியாதை இல்லாமல் இழிவாக நடந்துக்கொள்வார். சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளில் இசைஞானி சிக்கி வருகிறார். அத்திமட்டுமல்லாமல் தன்னை தவிர யாரும் திறமை இருப்பவர்கள் கூட வளரக்கூடாது என கீழ்த்தரமான எண்ணம் கொண்ட மட்டமான மனிதர் இளையராஜா என பிரபல இசையமைப்பாளர் கேம்ஸ் வசந்த் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இந்நிலையில் இளையராஜா தனது நெருங்கிய நண்பரான மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் உயிர் போகும் தருவாயில் இருந்தபோது இளையராஜாவை ஒரு முறை பார்த்து பேசவேண்டும் என ஆசைபட்டாராம். ஆனால் இளையராஜா கடைசிவரை வரை பார்க்க வரவே இல்லையாம். பின்னர் இளையராஜாவின் மனைவி மட்டும் வந்து பார்த்துள்ளார்.

அந்த நேரத்தில் மலேசியா வாசுதேவனின் மகன்… ஆன்டி எப்படியாச்சும் இளையராஜா Uncle’யை எங்க அப்பா இறப்பதற்குள் ஒருமுறை வந்து பார்க்க சொல்லுங்களேன் என கெஞ்சி கேட்டாராம். பின்னர் சில நாட்கள் கழித்து இளையராஜா மலேசியா வாசுதேவனை வந்து பார்த்துள்ளார். ஆனால் சில நிமிடத்திற்கு முன்னர் அவரது உயிர் பிரிந்துவிட்டது. அந்த நேரத்தில் இளையராஜாவிடம் நான், ‘உங்களுக்காகத்தான் இவ்வளவு நாள் காத்திருந்தார். இப்போதான் வர முடிந்ததா? உயிர் போயிடுச்சு போங்க’ என கத்தி கூறினேன் என கூறினார்.

Views: - 1233

22

17