அடப்பாவிகளா.. இணையத்தில் லீக்கான LEO HD.. தலையில் துண்டு போட்ட படக்குழு..!

Author: Vignesh
3 November 2023, 2:12 pm

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த லியோ படத்தை பார்க்க ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே காத்திருந்த நிலையில், படம் கடந்த அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

அதைப்போல படத்திற்கு விமர்சனங்கள் எப்படி வந்தாலும் ஒரு பக்கம் இருந்தாலும் வசூல் ரீதியாக லியோ படம் தமிழ் சினிமாவையே மிரள வைத்தது என்றே கூறலாம். அந்த வகையில், படம் வெளியான 15 நாட்களில் ரூ.553 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், படத்திற்கான வெற்றி விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், படக்குழுவுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஒரு விஷயம் ஒன்று நடந்துள்ளது.அதாவது, லியோ படத்தின் HD Print இணையத்தில் லீக்காகியுள்ளது. அதிகாரபூர்வமாக Netflix தளத்தில் வெளியாவதாக இருந்த லியோ படத்தின் HD Print திடீரென லீக்கானதால் படக்குழு அதிர்ச்சியுள்ளனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?