பல ராஜாக்கள பாத்தாச்சு டா… இவன் கத்தி ரொம்ப கூராச்சுடா.. அதிரடியாக வெளியான லியோ படத்தின் Badass பாடல்..!

Author: Vignesh
28 September 2023, 7:16 pm
leo-updatenews360
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா. கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது.

இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்வதாக அதன் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது விஜய் ரசிகர்களுடைய பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

leo-updatenews360

இதனிடையே, பாதுகாப்பு காரணங்களுக்காக இசை வெளியீட்டு விழா நடைபெறாது என படக்குழு அறிவித்தநிலையில், ஒவ்வொரு பாடலாக படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இரண்டாவது சிங்கிளான ‘Badass’ பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

Views: - 389

0

0