கேரள ரசிகர்களை சந்திக்க சென்ற லோகேஷுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சியில் கோலிவுட்!

Author: Shree
24 October 2023, 7:12 pm
lokesh
Quick Share

கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார். இதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.

அந்த வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது. இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் திரிஷா, கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடித்தனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படம் இதுவரை ரூ. 220 கோடிக்கும் அதிகமாக வசூல் எட்டியுள்ளது. இப்படத்தின் வெற்றியை கேரள ரசிகர்களுடன் கொண்டாட அவர்களை நேரில் சந்திக்க சென்றுள்ளார் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அப்போது ரசிகர்கள் கூட்டத்துடன் சிக்கிய லோகேஷுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த பதிவில்,

உங்கள் அன்புக்கு நன்றி கேரளா பாலக்காட்டில் உங்கள் அனைவரையும் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி மற்றும் நன்றியுடன். கூட்டத்தில் சிறு காயம் ஏற்பட்டதால், மற்ற இரண்டு இடங்களுக்கும், பத்திரிகையாளர் சந்திப்புக்கும் என்னால் செல்ல முடியவில்லை. விரைவில் உங்கள் அனைவரையும் கேரளாவில் சந்திக்க நிச்சயமாக வருவேன். அதுவரை இதே அன்புடன் லியோவை ரசித்துக்கொண்டே இருங்கள் எனக்கூறி பதிவிட்டுள்ளார். இதையடுத்து லோகேஷ் கனகராஜுக்கு என்ன ஆனது என கோலிவுட் ரசிகர்கள் அச்சத்தில் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

Views: - 369

1

0