படுக்கையறையில் மிருணாள் தாகூர் , தமன்னா…. மீண்டும் சர்ச்சை கிளப்பும் லஸ்ட் ஸ்டோரீஸ் டீசர்!

Author: Shree
6 June 2023, 8:03 pm

2018 ஆம் ஆண்டு அனுராக் காஷ்யப் , ஜோயா அக்தர் , திபாகர் பானர்ஜி மற்றும் கரண் ஜோஹர் ஆகியோரால் இயக்கப்பட்ட நான்கு குறும்படப் பகுதிகளைக் கொண்டது லஸ்ட் ஸ்டோரீஸ். இது 2013 ஆம் ஆண்டு வெளிவந்த பாம்பே டாக்கீஸ் திரைப்படத்தின் கருத்தை அடிப்படையாகக் கொண்டது.

இதில் ராதிகா ஆப்தே , பூமி பெட்னேகர் , மனிஷா கொய்ராலா , கியாரா அத்வானி விக்கி கௌஷல் , நேஹா தூபியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த தொடர் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது.

இந்த தொடரை, அமித் ரவீந்தர்நாத் சர்மா, கொங்கோனா சென் சர்மா, ஆர். பால்கி, சுஜோய் கோஷ் உள்ளிட்டோர் இணைந்து இயக்கியுள்ளனர். இதில் அம்ருதா சுபாஷ், அங்கத் பேடி, கஜோல், குமுத் மிஸ்ரா, மிருனால் தாக்கூர், நீனா குப்தா, தமன்னா, தில்லோடமா ஷோம், விஜய் வர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதில் தமன்னா எப்போதும் இல்லாத அளவுக்கு படு கிளாமரான உடைகளை அணிந்து விஜய் வர்மாவுடன் படுக்கையறை காட்சிகளில் நடித்திருக்கிறார். அதே போல் மிர்னால் தாகூரும் எல்லைமீறி கிளாமர் காட்சிகளில் நடித்திருக்கிறார். சமீப நாட்களாக நடிகை தமன்னா விஜய் வர்மாவுடன் டேட்டிங் சென்று கிசுகிசுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?