நான் என்ன அடிமையா?- கமல்ஹாசன் செய்த அநியாயம்! ஓபனாக போட்டுடைத்த சந்தானம் பட நடிகர்…

Author: Prasad
5 May 2025, 1:35 pm

கமல்ஹாசனா இப்படி செய்தது?

தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் இன்னும் அவரது ரசிகர்களின் மனதில் உலக நாயகனாகவே வலம் வருகிறார் கமல்ஹாசன். இந்திய சினிமாவில் பல தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திய பெருமை கமல்ஹாசனையே சேரும். நடிப்பிற்கு பல்கலைக்கழகமாக மட்டுமல்லாது சினிமாவை பற்றிய பல ஞானங்களையும் பெற்றிருக்கிறார் கமல்ஹாசன். 

makeup artist bujji babu talked about kamal haasan shocked fans

இவ்வாறு தன்னை ஒரு அறிவுஜீவியாக வெளிப்படுத்திக்கொள்ளும் கமல்ஹாசனை குறித்து சந்தானம் படத்தின் நடிகர் ஒருவர் சமீபத்தில் பேசியது அதிர்ச்சியை அளித்துள்ளது. 

புஜ்ஜி பாபு

தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு ஆஸ்தான ஒப்பனை கலைஞராக வலம் வருபவர் புஜ்ஜி பாபு. இவர் தற்போது சந்தானத்திற்கு மேக்கப் மேன் ஆக இருக்கிறார். அது மட்டுமல்லாது சந்தானம் நடித்த பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் வந்து கலக்கி உள்ளார். 

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட புஜ்ஜிபாபு,  “நான் கமல்ஹாசனிடம் பணியாற்றிய சமயத்தில் கம்பெனியில் இருந்து ஒரு பைசா கூட தரமாட்டார்கள். கமல் சார் தான் காசு கொடுப்பார். ஒரு நாள் எனது மூத்த மகளுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த காசு கேட்டேன். 

makeup artist bujji babu talked about kamal haasan shocked fans

அவர் ஒரு மாதிரி பேசிவிட்டார். நாம் கஷ்டப்பட்டு இவர்களிடம் ஒரு அடிமையாக வேலை பார்க்க வேண்டும் என தோன்றியது. அதன் பின் வெளியே வந்துவிட்டேன். 

அதன் பின் ஷங்கர் சார் என்னை தொடர்புகொண்டு கமல் சார் கூப்பிடுகிறார் என்று சொன்னார். நான் வர மறுத்துவிட்டேன்” என்று மனம் நொந்தபடி பேசினார். அவர் பேசிய வீடியோ துணுக்கு இணையத்தில் வைரல் ஆன நிலையில் கமல்ஹாசன் இப்படிப்பட்டவரா? என ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.  

  • assistant director told that aan paavam pollathathu movie script is mine கதை திருட்டு விவகாரத்தில் சிக்கிய ரியோ பட இயக்குனர்! டிரைலரோடு புகாரும் சேர்ந்து வெளிய வருதே?
  • Leave a Reply