அவ நடிச்சா நான் நடிக்க மாட்டேன்.. நயனுடனான பிரச்சனை குறித்து பேசிய மம்தா மோகன் தாஸ்..!

Author: Vignesh
18 June 2024, 3:07 pm
mamta mohandas
Quick Share

பொதுவாக சினிமாவைப் பொருத்தவரை திறமை இருந்தால் ரசிகர்கள் கண்டிப்பாக தலையில் தூக்கிவைத்து ஆடுவார்கள். அது போல் தான் ஒரு பெண் தமிழ் முகம் கொண்டிருந்தாலும் நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருக்கானு பிடிச்சிரும். அந்த வகையில், விஷாலுடன் சிவப்பதிகாரம், மாதவனுடன் குரு என் ஆளு, அருண் விஜயுடன் தடையற தாக்க உட்பட பல தமிழ் படங்களில் மம்தா மோகன் தாஸ் நடித்து புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற வேண்டியதன் காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். தற்போது அதிலிருந்து மீண்டு, சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது, தன்னுடைய கவர்ச்சி புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு வேலை வைத்து வருகிறார்.

Mamta Mohandas - updatenews360

மேலும் படிக்க: என்னை அடிமையா வெச்சிருந்தாங்க.. அவரு சொல்லியும் கேட்கலையாம்.. ஜீவி பிரகாஷ் Open Talk..!

தற்போது கூற வரும் விஷயம் என்னவென்றால், பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கும் நடிகை மம்தா மோகன் தாஸ் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், நடிகை மம்தா மோகன்தாஸ் பிரமோஷனுக்கு பேட்டி அளித்தும் வருகிறார். சமீபத்தில், இவர் அளித்த பேட்டியில் குசேலன் படத்தின் போது, நடிகை நயன்தாராவிற்கும் தனக்குமான பிரச்சனை குறித்து பகிர்ந்து உள்ளார்.

Mamta Mohandas - updatenews360

படத்திற்காக வேறு ஒரு ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு சென்று நான்கு நாட்கள் ஷூட் என்று சொல்லி மூன்று நாட்கள் ஷூட்டிங் நடக்காமல் இருந்தது. அதன்பின், ஒரு சில காட்சிகள் மட்டும்தான் உங்களுக்கு என்று சொன்னார்கள். அந்த பாடலில் நானும் இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, அதை நடத்தவில்லை. இது பற்றி யாரிடம் சென்று புகார் சொல்லவில்லை. சில நாட்கள் கழித்து ஒரு சில விஷயம் கேள்விப்பட்டேன். அந்த படத்தில், நடித்த நடிகை வேறொரு நடிகை நடித்தால் நான் படத்திற்கு வரமாட்டேன் என்று சொல்லி இருக்கிறாராம்.

mamta mohandas

மேலும் படிக்க: என்ன சாதிக்க போறீங்க.. சாதி மறுப்பு திருமணம்.. கொந்தளித்த இயக்குனர் மோகன் ஜி..!

பின் இரண்டு மூன்று வாரங்களுக்கு பின்னர், ரஜினி சாரிடமிருந்து எனக்கு கால் வந்தது. படத்தில் நடிக்க வந்ததற்கு நன்றி என்று தெரிவித்தார். மேலும், எனக்கு மட்டும் இது போல் நடக்கவில்லை. பலருக்கும் இப்படித்தான் நடக்கிறது, சூப்பர் ஸ்டார் பட்டம் எல்லாம் மக்கள் கொடுக்கவில்லை. அவர்களாகவே போட்டுக்கிட்டதுதான். பிஆர் வைத்து பேப்பரில் பட்டத்தை கொடுத்துக் கொள்கிறார்கள் என்று மம்தா வெளிப்படையாக பேசி இருப்பது பலனிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 140

0

0