அதுக்கு ஏன் என்ன கூப்பிட்டீங்க? விருது விழாவில் சிரிச்சிட்டே செஞ்சி விட்ட நடிகை மீனா!

Author:
3 October 2024, 4:25 pm

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்து கொண்டிருந்த நடிகை மீனா ஒரு நேரத்தில் ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வந்து கொண்டிருந்தார். தென்னிந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு , மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் மீனா குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானார் .

MEENA

குழந்தையிலிருந்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்ட இவர் ஹீரோயின் ஆன பிறகு கமல்ஹாசன் , ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார் . திருமணத்திற்கு பின்னர் கொஞ்சம் ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் கேப் விட்டிருந்த நடிகை மீனா மீண்டும் தனது இரண்டாவது இன்னிசை தொடங்கி திரிஷ்யம் 2 , ப்ரோ , டாடி உள்ளிட்ட படங்களில் மீனா நடித்திருந்தார் .

இப்போது திரைப்படங்களில் நடிக்க அதிக ஆர்வத்தை செலுத்தி வருகிறார். இதனிடையே மீனாவின் கணவர் கொரோனா தொற்றுநோய் காரணமாக இறந்து விட்டதால் அதிலிருந்து மீண்டு வந்த நடிகை மீனா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார் .

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஐபா விருது விழாவிற்கு சென்ற நடிகை மீனா அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேச ஆரம்பித்தபோது தமிழில் பேசினார். உடனடியாக மீனாவிடம் ஹிந்தியில் பேசுங்கள் என பத்திரிகையாளர்கள் கூற அதைக் கேட்டதும் டென்ஷன் ஆன மீனா இது ஹிந்தி விழாவா? ஹிந்தியில் தான் பேசணுமா? அதுக்கு எதுக்கு என்ன கூப்பிட்டீங்க? என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

meena

இதையும் படியுங்கள்: அப்போவும் இப்போவும் இளமை குறையா அழகி… திரிஷா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்திருக்காங்க பாருங்க!

மேலும், நான் தென்னிந்தியர்கள் மட்டும்தான் இங்கே வருகிறார்கள் என்று நினைத்தேன்.. தென்னிந்திய மொழி படங்கள் சிறப்பாக இருக்கின்றன. தென்னிந்தியராக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

ஐபா உர்சவம் தென்னிந்தியா மட்டுமின்றி வட இந்திய சினிமாக்காரர்களையும் ஒன்றிணைத்து பெரிய நிகழ்வாக நடத்துகிறது” என கூறிவிட்டு சென்றார். இந்த வீடியோவை பார்த்த தமிழ் ரசிகர்கள்…. நம் ரத்தம்… நம் நடிகை எனக்கூறி மீனாவை புகழ் பாராட்டி வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

  • savukku shankar said that red giant movies company plan to flop jana nayagan movie ஜனநாயகன் படத்தின் சோலியை முடிக்க ரெட் ஜெயண்ட் போட்ட பக்கா  பிளான்? பிரபலம் ஓபன் டாக்…