‘இது மட்டும் நடந்திருந்தா.. எனக்கு ஏற்பட்ட நிலை யாருக்கும் ஏற்பட கூடாது’ – கணவர் மறைவிற்கு பின் நடிகை மீனா எடுத்த அதிரடி முடிவு..!

Author: Vignesh
4 October 2022, 10:57 am
Quick Share

கணவர் மறைந்த பிறகு நடிகை மீனா உடல் உறுப்பு தானம் குறித்து அதிரடியாக முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதனை ரசிகர்கள் தற்போது ஷேர் செய்து டிரெண்டாக்கி வருகின்றனர். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை மீனா. தமிழில் ரஜினி,கமல், அஜித், விஜய், சத்யராஜ், பிரபு என டாப் நடிகர்களுடன் நடித்துள்ளார்.

அதே போல, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். மீனாவின் கணவர் நடிகை மீனாவின் கணவர் வித்யா சாகர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி அதிலிருந்து மீண்டார். அதன் பிறகு கடுமையான நுரையீரல் பாதிப்பால் ஆக்சிஜன் சிலிண்டருடன் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு என்ற நிலையில், உடல் உறுப்புக்காக பதிவு செய்து காத்திருந்தனர்.

6 மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த வித்யா சாகருக்கு மாற்று உறுப்புக்காக 3 மாதத்திற்கும் மேலாக காத்திருந்த நிலையில், இருதயத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார். கணவரின் இறுதி சடங்குகளை மீனாவே செய்தது கல் நெஞ்சத்தையும் கரைய வைத்தது.

Meena - Updatenews360

மெல்ல மெல்ல இயல்பு நிலை கணவரின் மரணத்திற்கு பிறகு வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மீனாவை அவரின் தோழிகளான சங்கவி, சங்கீதா, ரம்பா, குஷ்பு, ராதிகா என பலரும் வீடு தேடி சென்று அவரை பார்த்து ஆறுதல் கூறி அவரை வெளியில் அழைத்து வந்தனர். குடும்பம் குட்டி என்று இருந்த ரம்பா, மீனாவுக்காக வெளிநாட்டிலிருந்து வந்தார். தற்போது, மீனா மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார்.

இந்நிலையில், நடிகை மீனா, சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தையொட்டி, தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், என் கணவர் வித்யாசாகருக்கு உறுப்புகள் தானம் செய்ய யாராவது முன்வந்து இருந்தால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். அப்படி நடந்திருந்தால் என் வாழ்க்கையே மாறி இருக்கும்.

ஒருவர் உறுப்பு தானம் செய்வது மூலம் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கிறது. இதன் முக்கியத்துவத்தை நான் உணர்ந்து கொண்டேன். அந்த வகையில் எனது உடல் உறுப்புகளையும் நான் தானம் செய்கிறேன் என அவர் பதிவிட்ட பழைய பதிவினை அவரது ரசிகர்கள் தற்போது ஷேர் செய்து வருகின்றனர்.

Views: - 370

0

0