‘பூமியில் சொர்க்கம்… நான் கண்டுப்பிடித்துவிட்டேன்’ – மகாலக்ஷ்மியால் திணறிப்போன ரவீந்தர் பகிர்ந்த போட்டோ..!

Author: Vignesh
4 October 2022, 11:34 am
mahalakshmi-raveendar-updatenews360
Quick Share

மகாலக்ஷ்மியுடன் படுநெருக்கமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்து திணறடித்துள்ளார் ரவீந்தர்.

மகாலக்ஷ்மியுடன் படுநெருக்கமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்து திணறடித்துள்ளார் ரவீந்தர். சீரியல் நடிகை மகாலக்ஷ்மியும் தயாரிப்பாளர் ரவீந்தரும் கடந்த மாதம் ஒன்றாம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த அவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்தை தொடர்ந்து இருவரும் கடுமையான விமர்சனங்களில் அடிபட்டு வருகின்றனர். பணத்திற்காகதான் மகாலக்ஷ்மி குண்டாக இருக்கும் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என விளாசி வருகின்றனர். ஆனால் அதற்கெல்லாம் அசராமல் தங்களின் வாழ்க்கையை கொண்டாடி வருகின்றனர்.

தங்களை விமர்சிப்பவர்களுக்கும் சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் தங்களின் ஒரு மாத நிறைவை கொண்டாடினர் மகாலக்ஷ்மியும் ரவீந்தரும். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள மகாவும் ரவியும் என்ன செய்தாலும் எங்கு போனாலும் அதனை அப்டேட் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து விஜய் டிவியின் சிறப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்று கலக்கினர். மகாலக்ஷ்மி என்ன செய்தாலும் உடனே சமூக வலைதளங்களில் ரியாக்ட் செய்து வருகிறார் ரவீந்தர். இந்நிலையில் ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள போட்டோ இணையத்தை திணறடித்து வருகிறது.

அதாவது மகாலக்ஷ்மி தனது கணவரான ரவீந்தரின் கன்னத்தல் கண்களை மூடிக்கொண்டு ஸ்ட்ராங்காக நச்சச்சென்று முத்தம் கொடுத்துள்ளார். மகாலக்ஷ்மி கொடுக்கும் முத்தத்தை அவ்வளவு மகிழ்ச்சியாக அனுபவிக்கிறார் ரவீந்தர். மேலும் அந்த போட்டோவுக்கு பூமியில் சொர்க்கம்… நான் கண்டுப்பிடித்துவிட்டேன் என கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Views: - 382

0

0