மணிரத்னம் ரஜினிகாந்துக்கு ‘நோ’ சொல்ல.. இதுதான் காரணமா..? வெளியான உண்மையால் அப்செட்டில் ஃபேன்ஸ்..!

Author: Vignesh
4 October 2022, 11:48 am
manirathnam updatenews360
Quick Share

ரஜினிகாந்த் ஆசையாக கேட்டும் அவரின் கோரிக்கையை ஏற்க முடியவில்லை என இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸானது. படம் ரிலீஸான நான்கு நாட்களில் உலக அளவில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் தான் படம் பற்றி மணிரத்னம் பேசியது பலரையும் கவர்ந்திருக்கிறது.

ரஜினிகாந்த்

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்தாரா என்று மணிரத்னத்திடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, உண்மை தான். அவர் அன்புடன் கோரிக்கை விடுத்தார். இந்த படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கிறது. அதனால் ஒரு பெரிய ஸ்டாரை கொண்டு வர முடியாத நிலை. அதனால் தான் ரஜினியின் கோரிக்கையை ஏற்க முடியவில்லை என்றார்.

மணிரத்னம்

மணிரத்னம் மேலும் கூறியதாவது, பொன்னியின் செல்வனில் ரஜினி சாரை நடிக்க வைக்க முடியவில்லை. ஆனால் விரைவில் அடுத்த படத்தில் நடிக்க வைக்கலாம். யார் கண்டது என்றார். மணிரத்னம் கூறிய இந்த ஒரு வார்த்தை ரசிகர்களிடையே ஆவலை தூண்டியிருக்கிறது.

பெரிய பழுவேட்டரையர்

பொன்னியின் செல்வன் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினி கூறியதாவது, பொன்னியின் செல்வனில் நடிக்க விரும்பினேன். அதனால் பெரிய பழுவேட்டரையராக நடிக்க வைக்க முடியுமா என்று மணி சாரிடம் கேட்டேன். உங்கள் ரசிகர்கள் அதை ஏற்க மாட்டார்கள் என்று கூறிவிட்டார். நான் முதல் முறையாக கதையை படித்தபோது ஸ்ரீதேவியை தான் குந்தவையாக கற்பனை செய்தேன். மேலும் கமலை அருண்மொழிவர்மனாகவும், விஜயகாந்தை ஆதித்த கரிகாலனாகவும், சத்யராஜை பழுவேட்டரையராகவும் கற்பனை செய்தேன் என்றார்.

Views: - 374

0

0