லோகேஷ் கனகராஜுடன் டூயட் பாடப்போகும் ரஜினி பட நடிகை? இவருக்கு எங்கயோ மச்சம் இருக்கு!
Author: Prasad29 August 2025, 6:15 pm
ஹீரோவாக களமிறங்கும் லோகேஷ் கனகராஜ்…
இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக வலம் வருபவர்தான் லோகேஷ் கனகராஜ். “மாநகரம்”, “கைதி”, “மாஸ்டர்”, “விக்ரம்”, “லியோ”, “கூலி” என தொடர்ந்து மாஸ் ஹிட் திரைப்படங்களை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் தற்போது ஒரு புதிய திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.
இத்திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இத்திரைப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படம் என கூறப்படுகிறது. இத்திரைப்படத்திற்காக மார்ஷல் ஆர்ட்ஸ் கற்று வருகிறாராம் லோகேஷ் கனகராஜ். அந்த வகையில் இத்திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

லோகிக்கு இவர்தான் ஹீரோயினா?
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தில் “ஜெயிலர்” பட நடிகை மிர்னா மேனன் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம். இது குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

நடிகை மிர்னா மேனன், “பட்டதாரி” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினிகாந்திற்கு மருமகளாக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது “ஜெயிலர் 2” திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார்.
