நானி பட இயக்குனருடன் கைகோர்க்கும் ரஜினி? இப்படி ஒரு காம்போவை எதிர்பார்க்கவே இல்லையே!

Author: Prasad
27 June 2025, 4:27 pm

கூலி வரான் சொல்லிக்கோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், சௌபின், நாகர்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வரும் நிலையில் சன் பிக்சர்ஸ் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறது. 

nani director direct rajinikanth next film

இத்திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் “ஜெயிலர் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். 2023 ஆம் ஆண்டு வெளியான “ஜெயிலர்” திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. நெல்சன் இயக்கி வரும் இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

நானி இயக்குனருடன் கைக்கோர்க்கும் ரஜினி?

இந்த நிலையில் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்தை குறித்து தற்போது ஒரு ஆச்சரிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு நானி நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட் அடித்த “சரிபோதா சனிவாரம்” என்ற திரைப்படத்தை இயக்கிய விவேக் ஆத்ரேயாயுடன் ரஜினிகாந்த் கைக்கோர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

nani director direct rajinikanth next film

அதாவது ரஜினிகாந்திற்காக விவேக் ஆத்ரேயா ஒரு கதை எழுதி வருகிறாராம். விரைவில் ரஜினிகாந்தை வைத்து அவர் படம் இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் வெற்றிமாறன், மாரி செல்வராஜ் ஆகியோரும் ரஜினிக்கு கதை சொல்ல மிகவும் ஆவலோடு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!