நெல்சன் எடுத்த அதிரடி முடிவு …தோல்வியால் நடந்த விபரீதம்..!

Author: Selvan
13 November 2024, 7:20 pm

நெல்சன் தயாரித்த முதல் படம்

இயக்குனர் நெல்சன் முதன்முதலாக தயாரித்து வெளி வந்த திரைப்படம் ப்ளடி பெக்கர் . இப்படம் தீபாவளி அன்று வெளியானது.

அமரன் திரைப்படத்தின் மெகா வெற்றி மூலம் ப்ளடி பெக்கர்,பிரதர் படங்கள் மக்கள் மத்தியில் பெரிதும் வெற்றி பெறவில்லை.

nelson first production

கவின் நடித்த ப்ளடி பெக்கர் படத்தின் தமிழக உரிமையை ஃபைவ் ஸ்டார் செந்தில் வாங்கி வெளியிட்டார். சுமார் 11 கோடிக்கு உரிமையைக் கைப்பற்றி விநியோகித்த ஃபைவ் ஸ்டார் செந்திலுக்கு நஷ்டம் மட்டுமே ஏற்பட்டது. தொகை திரும்ப அளிக்க தேவையில்லை என்ற முறையிலேயே படத்திற்கான வியாபாரம் நடைபெற்றது.


தோல்வியான ப்ளடி பெக்கர்

தமிழகத்தில் ப்ளடி பெக்கர் படத்திலிருந்து ஃபைவ் ஸ்டார் செந்திலுக்கு 4 கோடி மட்டுமே திரும்பக் கிடைத்தது. சுமார் 7 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதால் படம் வெளியான சில நாட்களில், நஷ்டத் தொகையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஃபைவ் ஸ்டார் செந்திலிடம் உறுதியளித்தார் நெல்சன்.

தற்போது நெல்சன் ஃபைவ் ஸ்டார் செந்திலுடன் சந்திப்பு மேற்கொண்டு படத்தில் ஏற்பட்ட நஷ்ட தொகையில் சுமார் 5 கோடியை திரும்ப அளிப்பதாக உறுதியளித்துள்ளார் .

இதனால் விநியோகஸ்தர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.நெல்சனின் இந்த நற்செயலை சினிமா வட்டாரங்கள் பாராட்டி வருகின்றனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?