மகன் திருமணத்தில் நிதா அம்பானி அணிந்திருந்த நெக்லஸ் விலை தெரியுமா.. ஒரு பெரிய பட்ஜெட் படமே எடுக்கலாம்..!

Author: Vignesh
5 March 2024, 3:11 pm

இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் முதல் ஆளாக இருந்து வருபவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் என்ற மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி உலகமே அண்ணாந்து பார்க்கும் வகையில் வானளவு உயர்ந்திருக்கும் அம்பானி சுமார் ரூ. 9,43,091 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கிறார். இதன் மூலம் உலகத்தின் 11வது பெரும் பணக்காரர் என்ற இடத்தை பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி.

முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ் அம்பானி – இஷா அம்பானி என்ற இரட்டை குழந்தையும், ஆனந்த் அம்பானி என்ற இளைய மகனும் உள்ளனர். இதில் ஆனந்த் அம்பானிக்கு வருகிற ஜூலை 12ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்தியாவின் பணக்கார பில்லியனர்களில் ஒருவரான வீரன் ஏ. மெர்ச்சந்த் என்ற வைர வியாபாரின் மகள் ராதிகா மெர்ச்சந்த்தை சில ஆண்டுகள் காதலித்து அண்மையில் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டனர்.

ராதிகா மெர்ச்சந்த் பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். மார்ச் 1 முதல் மார்ச் 3 வரை இந்த Pre Wedding கொண்டாட்டம் குஜராத்தின் ஜாம் நகரில் உள்ள அம்பானியின் வீட்டில் நடைபெற்றது. இத்திருமணத்தில், உலக புகழ் பெற்ற தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சிக்காக நீதா அம்பானி மிகவும் காஸ்ட்லியான நகைகள் அணிந்திருந்தார்.

nita ambani

அவர் அணிந்திருந்த மரகத கல் மற்றும் வைரம் பதித்த அந்த நெக்லஸ் மட்டும் ரூபாய் 400 கோடி முதல் 500 கோடி இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அம்மாடியோ இந்த பணத்தை வைத்து ஒரு பெரிய பட்ஜெட் படமே எடுத்தரலாமே என்று கூறி வருகிறார்கள்.

  • Good News for Vijay And Trisha விஜய் – திரிஷா குறித்து விரைவில் குட் நியூஸ்.. பற்ற வைத்த பிரபலம்!
  • Views: - 186

    0

    0