நடிப்பே வரல… கொடூரமா நடந்துக்கிட்டேன் – பா. ரஞ்சித் பளீச்!

Author:
6 August 2024, 4:14 pm

எப்படிப்பட்ட கேரக்டர் கொடுத்தாலும் அதில் மிக கனகச்சிதமாக நடித்துக் கொடுத்து தன்னுடைய நடிப்புத் திறமையால் மிரள வைப்பவர் நடிகர் விக்ரம் . இவர் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஞ்சித்துக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி மேனன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ரூ. 150 கோடி பொருட்செலவில் மிக பிரமாண்டமாக வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் குறித்து பேசிய பாரஞ்சித் மாளவிகா மோகனின் நடிப்பு குறித்து பேசி இருந்தார் .

அப்போதும் மாளவிகா மோகனன் எதிர்பார்த்தபடி இந்த கேரக்டருக்கு பக்காவாக பொருந்தினார். ஆனால், அவரது நடிப்பு சுத்தமாக எனக்கு பிடிக்கவே இல்லை. குறிப்பாக சண்டை காட்சிகளில் அவருக்கு எதுவுமே தெரியவில்லை. முதலில் லுக் டெக்ஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்தோம். ஆர்த்தியாக அவர் நிஜமாகவே மாறிவிட்டார்.

thangalaan

ஷூட்டிங் போனபோதுதான் அவருக்கு ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பது ரொம்ப சிரமம் என்பது எனக்கு புரிந்தது. பிறகு நான் ரொம்பவே கொடூரமாக நடந்து கொண்டேன். கம்பு வச்சி சுத்துறாங்க… சண்டை போடுறாங்க… ஆனால் எதுவுமே அவங்களுக்கு வரவே இல்ல. இருந்தாலும் அவங்களோட இன்வால்வ்மெண்ட் எனக்கு பிடித்திருந்தது.

ஆனால், அவங்களுக்கு நடிப்பு வரல. உடனே சிலம்பம் வாத்தியாரை வரவைத்து அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான சிலம்பம் பயிற்சி மற்றும் சண்டை பயிற்சி எல்லாம் கற்று கொடுத்து அவரை பிசிக்கலாக ட்ரெயின் பண்ண பிறகு தான் சூட்டிங் பண்ணோம். அதன் பிறகு நடிப்பில் மிரட்டி எடுத்து விட்டார் மாளவிகா மோகனன் என பா. ரஞ்சின் புகழ்ந்து பேசினார்.

  • devi sri prasad complains that turkish singer copied his pushpa movie song என்னோட பாடலை ஹாலிவுட்டில் காப்பியடிச்சிட்டாங்க- கடுப்பில் தேவி ஸ்ரீ பிரசாத்!