சுயமரியாதை எங்க போச்சு ?.. ரசிகரின் கேள்விக்கு ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புது ஐஸ்வர்யாவின் Bold Reply..!

Author: Vignesh
18 March 2023, 3:00 pm

கண்ணனுக்கு ஜோடியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் vj தீபிகா. இவர் மேக்கப் போடுவதால் முகத்தில் நிறைய பருக்கள் ஏற்பட்ட நிலையில், இவரை தொடரில் இருந்து வெளியேற்றிவிட்டனர். சீரியல் குழுவினர் முகத்தை சரி செய்ய வாய்ப்பு கொடுத்தும் தன்னால் முடியவில்லை எனஅவரே கூறியிருந்தார்.

vj deepika - updatenews360

சீரியலில் இருந்து வெளியேறிய பின் vj தீபிகா யூடியூப் பக்கம் தொடங்கி நன்றாக சம்பாதிக்க தொடங்கி விட்டார். இந்த நிலையில் தான் தீபிகா மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யாவாக நடிக்க மீண்டும் வாய்புபு வந்துள்ளது.

இதனிடையே, சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர், “பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் உங்களுடைய லுக்கை வைத்து தான் ரிஜக்ட் செய்தார்கள், ஆனால் இப்போ உங்க லுக் நன்றாக இருப்பதால், மறுபடியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அழைக்கிறார்கள்.

vj deepika - updatenews360

உங்களுடைய சுயமரியாதை எங்கே போனது? என்றும், இந்த சீரியலில் நடிக்கும் ஆஃபரை நீங்கள் ஏற்பீர்கள் என தான் நினைக்கவில்லை என்று தெரிவித்தும், இந்த ஆஃபரை நீங்கள் ரிஜக்ட் செய்திருந்தால் உங்கள் மீது இன்னும் மரியாதை வந்திருக்கும் என கமெண்ட் செய்து இருந்தார்.

vj deepika - updatenews360

இதற்கு பதில் அளித்திருந்த விஜே தீபிகா, நம்மள விட்டு ஒன்னு போயிடுச்சுனா அதுக்கு யார் காரணம்னு யோசிச்சி ரிவஞ்ச் எடுக்குறதுக்கு பதில, கிடைக்குற வாய்ப்பை பயன்படுத்தி வெற்றியாளராக இருக்குறதுதான் நல்ல முடிவு என்று தான் நினைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

vj deepika - updatenews360

விஜே தீபிகாவின் இந்த பதிலை ஆமோதித்த பல ரசிகர்கள், “உங்களை ரிஜக்ட் பண்ணியிருந்தாலும் மீண்டும் உங்களை அந்த கதாபாத்திரத்துக்கு அழைக்கும் வகையில் நீங்கள் இருந்துதான் உங்கள் கடின உழைப்பை காட்டுகிறது” என பாசிடிவாக தெரிவித்து வாழ்த்தி உள்ளனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!