ராம்சரண் மனைவி கர்ப்பமானது இப்படிதான்..? உண்மையை போட்டுடைத்த பொன்னம்பலம்..!

Author: Rajesh
25 June 2023, 6:45 pm

90ஸ் காலகட்டத்தில் தமிழ் திரைப்படங்களின் வில்லன் நடிகராக பெரும் அளவில் பிரபலமானவர் நடிகர் “கபாலி” எனும் பொன்னம்பலம். இவர் மைக்கேல் மதன காமராஜன் என்ற படத்தில் நடிக்க துவங்கி செந்தூரப் பாண்டி, நாட்டாமை, கூலி, அருணாச்சலம் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார். மேலும், சண்டை பயிற்சியாளாகவும் இருந்துள்ளார்.

Ponnambalam-updatenews360

இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். கடந்த வருடம் பொன்னம்பலம் கடுமையான உடல் நல பிரச்சனைக்கு ஆளானார். அவரிடம் இருந்த பணம் அனைத்தையும் செலவு செய்தும் கூட அவரால் அவர் உடலை சரி செய்ய முடியவில்லை. இறுதியில் டயாலிசிஸ் செய்வதற்கு பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தார்.

தனக்கு முடியாத தருணத்தில் உதவிய நடிகர் குறித்து தற்போது ஒரு பேட்டியில் அவர் பேசியுள்ளார். மருத்துவ செலவுக்கு பணம் இல்லாத சமயம் யாரிடம் காசு கேட்பது என்றும் தெரியவில்லை, பழைய காலங்களில் சிரஞ்சீவியுடன் சேர்ந்து சில படங்களில் நடித்துள்ளார் பொன்னம்பலம்.

இதனால் சிரஞ்சீவிக்கு ஒரு மெசேஜ் மட்டும் செய்துள்ளார். அவர் அனுப்பிய மெசேஜை பார்த்தவுடனே அவருக்கு போன் செய்து விஷயத்தை தெரிந்துகொண்ட சிரஞ்சீவி, உடனே அப்போலோ மருத்துவமனைக்கு பேசி அங்கு பொன்னம்பலம் சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளார்.

அதன் பிறகு கிட்டத்தட்ட ஆறு மாசம் அங்கு சிகிச்சை பெற்றுள்ளார் பொன்னம்பலம். அதற்கான மொத்த செலவையும் சிரஞ்சீவி ஏற்றுக்கொண்டுள்ளார். கடவுள் என்று ஒருவரை நான் பார்த்ததில்லை. நான் நேரில் கண்ட கடவுள் என்றால் அது சிரஞ்சீவியாகதான் இருக்க முடியும். சிரஞ்சீவிக்காக நான் மனமாற நன்றி கூறினேன் அதன் பிரதிபலனாக தான் சிரஞ்சீவியின் மருமகள் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். பத்து வருடமாக அவர்கள் பிள்ளை இல்லாமல் இருந்தார்கள் என்று பொன்னம்பலம் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?