அஜித் மட்டும் இதை திரும்ப செஞ்சா விஜய்க்கு சேர்ந்த கூட்டம் எல்லாம் பெருசில்ல..!

Author: Rajesh
25 June 2023, 5:48 pm
ajith
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் “தளபதி” என்று ரசிகர்களால் அழைக்கப்படும் முன்னணி நடிகராக சிறந்து விளங்கி வருகிறார். 1992ல் நாளைய தீர்ப்பு என்னும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஜய். முதல் படத்தில் நிறைய விமர்சனங்களை எதிர் கொண்டாலும் தொடர்ந்து முயற்சியை கைவிடாமல் நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் இவர் தந்தை இயக்கத்தில் நடித்து, அதன் பின்னர் பல முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து தனக்கென சினிமாவில் இடம் பிடித்தார். தற்போது இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் விஜய் விரைவில் அரசியலிலும் இறங்க உள்ளார் என சொல்லப்படுகிறது. நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களை ஒன்றிணைக்கும் விதமாகவும், நலத்திட்ட உதவிகள் செய்வதில் ஈடுபடும் விதமாகவும் விஜய் மக்கள் இயக்கத்தை நடத்தி வருகிறார்.

Vijay - Updatenews360

சமீபத்தில், தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத் தொகை நேற்று வழங்கினார். இவருக்கு இணையாக தமிழ் சினியுலகில் முன்னணி இடத்தில் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்.

தனது இயக்கம் மற்றும் ரசிகர்கள் மூலம் அஜித் ஏராளமான உதவிகளை செய்து வந்தார். ஆனால், சமீபத்தில் ரசிகர் மன்றத்தை நிறுத்துவதாக அறிவித்தார். இந்நிலையில், அஜித் மீண்டும் ரசிகர் மன்றம் தொடங்கினால் விஜய்க்கு வந்தது விட அதிக ரசிகர்கள் கூடுவார்கள் எனவும், தலைவர், செயலாளர், பொருளாளர் என பல பதவிகளை கொண்டுள்ள விஜய் இந்த கூட்டத்தை சேர்ப்பது பெரிய விஷயம் இல்லை என பேசப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 231

1

0