மாவீரனுக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்தது தனுஷ் இல்ல அந்த ‘கடவுள்’ நடிகர் தான்..? அட இது நல்லா இருக்கே..!

Author: Rajesh
9 July 2023, 5:00 pm

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் stand-up காமெடியன் ஆகவும், மிமிக்கிரி செய்தும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், சில குறும்படங்களில் நடித்தார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பேச்சின் மூலம் மக்கள் முதல் பிரபலங்கள் வரை பரிச்சயம் பெற்றார்.

sivakarthikeyan-updatenews360

பின்னர், மெரினா, 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் என அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவே, முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். மேலும், நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் திகழ்ந்து வருகிறார்.

தற்போது, அயலான், மாவீரன் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மடோனா அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் 14ம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் மாவீரன். இப்படத்தில் வானத்தை பார்த்தால் சிவகார்த்திகேயன் வேறு ஆளாக மாறிவிடுகிறார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் மாவீரன் கதாபாத்திரத்திற்காக ஒரு பிரபலத்தை வாய்ஸ் ஓவர் கொடுக்க வைத்திருக்கிறார்கள்.

Maveeran SK - Updatenews360

அந்த பிரபலம் யார் என்று சொல்ல மாட்டேன் என தெரிவித்துவிட்டார் மாவீரன் பட வில்லன் மிஷ்கின். படங்களில் பிசியாக இருப்பதால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன் உள்ளிட்டோர் வாய்ஸ் ஓவர் கொடுக்க முடியாது என கூறிவிட்டார்களாம். இதையடுத்து தனுஷ் தான் வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால், அவரது டீமிடம் கேட்டால், அவர் குரல் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில் மாவீரனுக்காக வாய்ஸ் ஓவர் கொடுத்திருப்பது விஜய் சேதுபதி என பேச்சு கிளம்பியிருக்கிறது. ஆனால் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை. மாவீரனுக்காக சூர்யா, சிம்பு கூட வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. மாவீரனுக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்த அந்த பிரபலம் யார் என்கிற கேள்வி தான் சமூக வலைதளத்தில் கேட்கப்பட்டு வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!