ச்சீ…உங்களுக்குலாம் வெக்கமே இல்லையா? பாஜகவை கண்டபடி பேசும் பிரகாஷ் ராஜ்? என்னவா இருக்கும்?

Author: Prasad
10 May 2025, 6:09 pm

அரசியல்வாதி பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ் சமீப காலமாகவே பாஜவை விமர்சித்தே பேசி வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மத்திய பெங்களூர் தொகுதியில் போட்டியிட்டார். அதனை தொடர்ந்து மிகவும் தீவிரமாகவே பிரதமர் மோடியையும் அவர் சார்ந்த பாரதிய ஜனதா கட்சியையும் மிகவும் கடுமையாகவே விமர்சித்து வருகிறார். 

prakash raj asked bjp that you are not ashamed of this type of politics

தற்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் பாஜக தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு இந்தியாவை ஆண்ட மன்மோகன் சிங் பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு பதிலடியே தரவில்லை, தற்போது மோடிதான் பயங்கரவாதிகளை களையெடுக்க புறப்பட்டுள்ளார் என்பது போல் அந்த வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்து தனது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

உங்களுக்குலாம் வெட்கமே இல்லையா?

“நெருக்கடியான இக்காலகட்டத்தில் நாடு ஒன்றுபட்டு இருக்கும் இந்த சமயத்தில், இராணுவம் சண்டையிட்டுக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில், எல்லையில் குடிமகன்கள் இரத்தம் சிந்திக்கொண்டிருக்கும் இவ்வேளையில் முட்டாள்கள் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். இது இந்தியாவின் மதவெறியர்கள் கட்சியின் அருவருப்பான அரசியல். இதற்கு நீங்கள் வெட்கப்படவில்லையா பாஜகவே” என்று ஆதங்கத்தோடு பகிர்ந்துள்ளார் பிரகாஷ் ராஜ். 

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?
  • Leave a Reply