கச்சா பாதம் பாடலுக்கு பட்டையைக் கிளப்பிய பிரியா அட்லி : Latest Video..!

Author: Rajesh
18 April 2022, 11:18 am

ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான அட்லி, அதனை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் ஹிட் படங்களை தனது முன்னணி இயக்குனராக வரிசையில் இடம் பிடித்தார். ஷங்கரின் உதவி இயக்குனர் என்ற அடையாளத்தோடு அறிமுகமான அட்லி, இன்று தனக்கென ஒரு அடையாளத்தோடு வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் பாலிவுட் படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சி நடிகை கிருஷ்ணபிரியா என்பவரை அட்லி திருமணம் செய்துகொண்டார். ஜாலியா ஊர் சுற்றுவது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்லீயுடன் ஆட்டம் போட்டு ரீல் போடுவது என இவரது மனைவி பிரியா எப்போது இணையத்தில் ஆக்டிவாகவே இருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது கருப்பு உடையில் கச்சா பாதம் பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகியுள்ளது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?