விஜய்க்கு விக் வாங்கி கொடுத்தே கடனாளி ஆகிட்டோம்? தயாரிப்பாளர் ராஜன் ஆவேசம்!

Author: Shree
11 March 2023, 11:30 am

தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ராஜன் அவ்வப்போது திரைப்பட விழாக்களில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொன்டு நடிகர் , நடிகைகள் குறித்து சர்ச்சனையான விஷயங்களை பொது மேடையில் பேசி பரபரப்பை ஏற்படுவார்.

தயாரிப்பாளர்கள் படும் கஷ்டம் , நஷ்டம் உள்ளிட்டவற்றை குறித்து உண்மை கருத்தை பேசுவார்.
பெரும்பாலும் அவர் கூறும் கருத்துக்கள் உண்மைலயே நடந்து வருவதால் அவரது கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அப்படிதான் தற்போது சமீபத்திய பேட்டியில்,

நடிகர்கள் தங்களுக்கு ரூ 25, 000 விக் வாங்குகிறார்கள். அதிலே கொள்ளையடித்து தயாரிப்பாளர்களை நஷ்டத்தை சந்திக்க வைக்கிறார்கள். ஷூட்டிங்கிற்கு காரில் வர நாங்க பெட்ரோல் போடவேண்டியதா இருக்கு. அப்போ அவங்க வாங்குற சம்பளம் எதுக்கு? என கோபட்டார்.

மேலும், அவர் கூறியுள்ள இந்த விக் சமாச்சாரம் விஜய்யை தான் மறைமுகமா பேசியுள்ளார் என நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்துள்ளனர். விஜயகாந்த், சத்யராஜ் போன்ற சில நடிகர்கள் பெட்ரோல் செலவுக்கெல்லாம் எங்க கிட்ட காசு வாங்கமாட்டாங்க. ஆனால், பெயர் குறிப்பிட விரும்பாத சில பெரிய நடிகர்களே தயாரிப்பாளர்களை நடுரோட்டில் நிற்கவைத்துவிடுகிறார்கள் என கூறி ஆவேசப்பட்டுள்ளார். இதோ அந்த வீடியோ:

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?