ஆபாசமெசேஜ்.. மிரட்டல்.. சீரியல் நடிகரால் இரவோடு இரவாக காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த ரச்சிதா..!

Author: Vignesh
21 June 2023, 1:20 pm

வெள்ளித்திரை நடிகர்களை காட்டிலும் தற்போது, சின்னத்திரை நடிகர்களுக்கு மவுசு ஜாஸ்தி தான் அந்த வகையில், வெள்ளித்திரை நடிகர்களுக்கு நிகராக அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

Rachitha - Updatenews360

இவர் முன்னதாக பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு இடையே, ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இதனிடையே, இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து, கணவருடன் ஒன்று சேர்ந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறிவிட்டதாக சீரியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரச்சிதா மகாலட்சுமி மகளிர் காவல் நிலையத்தில் தன்னுடைய கணவர் மீது புகார் அளித்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதில், தினேஷ் சில தினங்களாக தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்புவதாகவும், மேலும் தன்னை தொடர்பு கொண்டு மிரட்டி வருவதாகவும் ரச்சிதா மகாலட்சுமி பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.

Rachitha-updatenews360-1

இதனையடுத்து, காவல் நிலையத்தில் ஆஜரான தினேஷ் விவாகரத்து பெற நீதிமன்றத்திற்கு போகலாம் என்று கூறிவிட்டு சென்றுள்ளாராம். இது குறித்து கண்ணாடி துகள்கள் உடைந்தபடி இருக்கும் ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை ரச்சிதா மகாலட்சுமி பகிர்ந்துள்ளார்.

Rachitha-updatenews360-1

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!