மீண்டும் அப்பாவாகும் ரோபோ ஷங்கர்? திருமண வயதில் மகள் இருக்கும் போது இது தேவையா?

Author: Shree
21 June 2023, 1:50 pm

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவரான ரோபோ ஷங்கர் விஜய் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மேடை சிரிப்புரை மூலமாக பரவலாக அறியப்பட்டார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார்.

அதையடுத்து தமிழ் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க நடித்து வருகிறார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாயை மூடி பேசவும், மாரி , புலி போன்ற திரைப்படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார். இவரது மனைவி பிரியங்காவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர்களது மகள் இந்திரஜாவும் தளபதி விஜயின் பிகில் படத்தில் பாண்டியம்மாவாக நடித்து பிரபலம் ஆனார். தொடர்ந்து தற்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நேரத்தில் ரோபோ ஷங்கர் கடந்த ஆறு மாத காலமாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து, எலும்பும் தோலுமாக ஆகிவிட்டார் . அதன் பின்னர் தொடர் சிகிச்சை எடுத்து தற்போது நலமாக இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரோபோ ஷங்கர் மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசையாக இருக்கிறது என கூறி அதிர்ச்சி அளித்துள்ளார். 44 வயதாகும் அவருக்கு திருமண வயதில் மகள் இருக்கிறார். மாப்பிள்ளை கூட பார்த்தாயிற்று விரைவில் திருமணம் நடைபெறவிருக்கும் இந்த நிலையில் ரோபோ ஷங்கர் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுவதை நெட்டிசன்ஸ் கிண்டலடித்து வருகிறார்கள்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ