கோச்சடையான் காப்பி… விஜய்யை வம்புக்கு இழுத்த ரஜினி மகள்… லியோ பட போஸ்டரால் வெடித்த மோதல்..!

Author: Vignesh
4 October 2023, 1:30 pm

தமிழ் சினிமா திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் இளைய தளபதி விஜய். இவர் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் என்றாலே, அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும். அதில் முதல் விருந்தாக விஜய் நடித்து வெள்ளி திரைக்கு வரவிருக்கும் திரைப்படத்திற்கான ஆடியோ லான்ச் என்றாலே, விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பும், அரசியல் வட்டாரத்தில் விஜய் பேசும் பஞ்ச் வசனங்களும் பெரும் பிரபலமானவை அப்படியாக பேசப்பட்டு வந்தது.

தற்போது, வருகிற அக்டோபர் 19ஆம் தேதி உலகமெங்கும் வெள்ளி திரையில் வரவிருக்கும் லியோ திரைப்படத்திற்கு பாதுகாப்பு நலன் கருதி, ஆடியோ லான்ச் கேன்சல் செய்யப்பட்டதாக லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பானது, சினிமா திரைத்துறை மட்டுமில்லாமல், அவரது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. விஜய்க்கு அரசியல் வட்டாரத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அதனால் அதான் ஆடியோ லான்ச் கேன்சல் செய்துவிட்டதாகவும் பேச்சுக்கள் பேசப்பட்டது. தொடர்ந்து லியோ சில பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.

leo

இதனிடையே, தற்போது லியோ படத்தில் கழுதைபுலியுடன் சண்டை போடும் ஒரு போஸ்டரை வெளியிட்டனர். இந்த போஸ்டர் வெளியானதும், ரஜினி மகள் கோச்சடையான் படத்தில் ரஜினி கழுதைப்புலி-உடன் சண்டை போடும் காட்சியை பகிற, இந்த நேரத்தில் இது தேவையா என விஜய் ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.

Soundarya-Rajinikanth -updatenews360
  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?