அனாதை நாயே… ரஜினியை திட்டிய பிரபல நடிகைக்கு ரசிகர்கள் கொலை மிரட்டல்!

Author:
4 November 2024, 5:46 pm

கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ச்சியாக ஆக்சன் ஹீரோவாக இளம் ஹீரோக்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் ரஜினியை குறித்து பிரபல வில்லி நடிகையான வடிவுக்கரசி மிகவும் மோசமாக அவரை திட்டியதாகவும் அதனால் ரசிகர்கள் அவரை மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் ஒன்று நடந்தேறியதாக செய்தி ஒன்று வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது.

vadivukkarasi

அதாவது சமீபத்து பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வடிவுக்கரசி கடந்த 1997 ஆம் ஆண்டு வெளிவந்த அருணாச்சலம் திரைப்படத்தில் நான் ரஜினிகாந்தின் பாட்டியாக வில்லி கேரக்டரில் நடித்திருந்தேன் சுந்தர்சி இயக்கத்தில் வெளிவந்த அந்த படத்தில் சௌந்தர்யா , ரகுவரன் , விசு , ராமசாமி உள்ளிட்ட பலர் எங்களுடன் நடித்திருந்தார்கள் .

இந்த படம் முடிந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த போது திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானல் சென்றேன். அப்போது என்னுடைய அம்மாவுடன் சென்ற இந்த பயணத்தின் போது ரயிலில் கிளம்புவதற்கு முன்பு டிடிஆர் என்னிடம் வந்து கொஞ்சம் வெளியில் வாங்க என்று சொன்னார். உடனே நான் இது நம்ம சீட் இல்லை போல என்று நினைத்து அவரிடம் கேட்டேன்.

இல்லை மேடம் ரயில் முன்பு நின்று போராட்டம் செய்கிறார் நீங்கள் வந்து மன்னிப்பு கேட்டு விடுங்கள் என்று என்னிடம் சொன்னார். அதற்கு நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்? நான் எந்த தப்பும் பண்ணவில்லையே என கூறினேன். அதன் பிறகு டிடிஆர் நீங்கள் முதலில் வெளியில் வாங்க என்று சொல்லி என்னை அழைத்து வந்தார்.

ரயிலை மறித்து நின்றுக்கொண்டிருந்த ஒரு ரஜினி ரசிகர்…. என் தலைவனையே அனாதை பயலே என்று சொல்வாயா? என்று சொல்வாயா என்று கேட்க அப்போதுதான் வடிவுக்கரசிக்கு நியாபகம் வந்ததாம். எனக்கு பேச சொல்லி சினிமாவில் வசனம் சொன்னார்கள் நான் அதை பேசினேன் இதில் என்ன இருக்கிறது?என்று கேட்க…. அவங்க சொன்னார் நீ பேசுவியா? மன்னிப்பு கேள் என்று கத்தி கூச்சலிட்டார்.

என்னப்பா ரகுவரன் அவ்வளவு பேசி அவரை அடிக்கிறார். அதற்கெல்லாம் ஒன்றுமே சொல்லலையே என்று கேட்க…. அவர்தான் பதிலுக்கு அடி வாங்குகிறாரே நீ அடி வாங்குகிறாயா? ஒழுங்கா மன்னிப்பு கேள் என்று என்னிடம் கத்தினார்.

இதன்பிறகு அதன் அவரிடம் நான் மன்னிப்பு கேட்ட பிறகு அவர் கிளம்பி சென்றார் என அந்த பேட்டியில் நடந்த சம்பவத்தை வடிவுக்கரசி கூறி இருக்கிறார். திரைப்படத்தில் ரஜினியை அனாதை என்று திட்டியதற்கே வடிவுக்கரசியை ரஜினி ரசிகர் ரயில் மறித்து மன்னிப்பு கேட்க வைத்த இந்த சம்பவம் பல வருடங்களுக்கு முன்பு நடந்திருந்தாலும் தற்போது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

  • Nayanthara Talk Indirectly about Prabhu Deva இன்னொரு திருமணம் செய்வதில் தப்பே இல்லை : பகீர் கிளப்பிய நயன்தாரா!
  • Views: - 87

    0

    0