படப்பிடிப்பில் இருந்த நடிகையை காரில் போட்டு தூக்கிச் சென்ற ரஜினி.. பல நாள் பிறகு வெளியான உண்மை!

Author: Udayachandran RadhaKrishnan
1 February 2025, 4:53 pm

படப்பிடிப்பில் இருந்த நடிகையை காரில் போட்டு ரஜினிகாந்த் தூக்கிச் சென்ற சம்பவத்தை அந்நடிகையே விபரமாக கூறியுள்ளார்.

ஆர்வி உதயகுமார் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்து பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் எஜமான். 1993ல் வெளியான இந்த படம் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டது.

மீனா, ஐஸ்வர்யா, நெப்போலியன், விஜயகுமார் என பலர் நடிக்க இளையராஜா இசையில் பாடல்கள் இன்று வரை மக்கள் மனதில் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில பேசிய நடிகை ஐஸ்வர்யா, நான் எஜமான் படத்தில் நடித்த போது ஒரு சம்பவம் நடந்தது.

நான் எப்போதும் ரஜினியை அங்கிள் என்று தான் கூப்பிடுவேன். சிறுவயதில் இருந்தே கூப்பிட்டு பழக்கம். அப்போது ‘உரக்க கத்துது கோழி’ பாட்டுக்கு நான் தண்ணீரை எடுத்து ஊற்றிக் கொள்ள வேண்டும்.

கிட்டத்தட்ட எத்தனை பக்கெட் என்றே தெரியவில்லை, அந்த பாட்டுக்காக நான் தண்ணீரை வாரி வாரி இரைத்தேன். சூட்டிங் முடிந்த நிலையில், எனக்கு பயங்கர காய்ச்சல், பொள்ளாச்சியில் குடிசை போன்ற வீடுகள் அதிகம். படப்பிடிப்பு பக்கத்தல் குடிசை இருந்தத. அதற்குள் வெதுவெதுப்பாக இருந்ததால் நான் அங்கு சென்று காய்ச்சலால் தூங்கி விட்டேன்.

Aishwarya Bhaskaran

இயக்குநர் அடுத்த டேக் எடுக்க என்னை அழைக்க, எல்லோரும் என்னை காணவில்லை என தேடினார்கள். ஆனால் ரஜினி அங்கிள், நான் இருக்கும் குடிசையை பார்த்துவிட்டார்.

Aishwarya Rajini in Yajaman

உடனே வா, இயக்குநர் கூப்பிடுறாரு என என்னை தொட்டு அழைத்தார். அப்போது தான் அவருக்கு தெரிந்தது எனக்கு ஜூரம் என்று. உடனே என்னை அப்படியே காரில் தூக்கி போட்டு பொள்ளாச்சியில் இருந்து கோவையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று அட்மிட் செய்தார். இது என் வாழ்நாளில் மறக்கவே முடியாத அனுபவம் என கூறினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!