பாட்ஷா ஸ்டைலில் புத்தாண்டு வாழ்த்து: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு..!

Author: Selvan
1 January 2025, 1:01 pm

சினிமா பிரபலங்களின் வாழ்த்துக்கள்

இன்று 2025 புது வருட கொண்டாட்டத்தை உலகெங்கும் இருக்க கூடிய மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.நேற்று இரவு 12 மணி நெருங்கும் போது சென்னை,கோவை போன்ற முக்கிய நகரங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Superstar Rajinikanth punch dialogue

கரகோசங்கள் எழுப்பியும்,ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியும்,இந்த புது வருடம் எல்லோருக்கும் நல்ல விதமாக அமையனும்னு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்க: நள்ளிரவில் திருத்தணி கோவிலுக்கு வந்த பிரபல நடிகர்… புத்தாண்டில் பக்தர்கள் சர்ப்ரைஸ்!!

சினிமா பிரபலங்கள்,அரசியல் வாதிகளும் மக்களுக்கு தங்களுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாட்ஷா படத்தின் பஞ்ச் வசனத்தோடு மக்களுக்கு தனது ஸ்டைலில் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.மேலும் அவர் தனது வீட்டிற்கு வெளியே வந்து அங்கே கூடி இருந்த ரசிகர்களை பார்த்து கைகளை அசைத்து உற்சாகமாக அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறினார்.

மேலும் நடிகர் தனுஷ்,சிம்பு,இசையமைபாளர் ஏ ஆர் ரகுமான் என பல நட்சத்திரங்கள் தங்களுடைய ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தங்களுடைய சமூகவலைத்தளத்தில் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க நடிகர் அஜித் புத்தாண்டை கொண்டாட குடும்பத்தோடு சிங்கப்பூர் சென்று இருக்கிறார்.மேலும் நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் மாதவன் குடும்பம் ஒன்றாக துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தை கொண்டாடினார்கள்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?