ரஜினி-கமல் கூட்டணியை உறுதிபடுத்திய பிரபலம்? உற்சாகத்தின் உச்சியில் ரசிகர்கள்…

Author: Prasad
19 August 2025, 4:11 pm

46 வருடங்களுக்குப் பிறகு மீண்டும்?

1970, 80களில் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இணைந்து கிட்டத்தட்ட 16 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் நடித்த முதல் திரைப்படமான “அபூர்வ ராகங்கள்” திரைப்படத்தில் கூட கமல்ஹாசன்தான் கதாநாயகன். அதனை தொடர்ந்து பல வெற்றித்திரைப்படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர். ஆனால் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து நடிப்பதை நிறுத்திக்கொண்டனர். 

கோலிவுட்டை பொறுத்த வரை இவர்கள் இருவரும் இணைந்து நடித்த கடைசி திரைப்படம் “அலாவுதீனும் அற்புத விளக்கும்”. இத்திரைப்படம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த வகையில் கிட்டத்தட்ட 46 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் இணையவுள்ளதாக பேசப்பட்டு வருகிறது. 

Rajinikanth and kamal haasan again join hands after 46 years

ரஜினி-கமல்-லோகேஷ் கனகராஜ்

அதாவது “கூலி” திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள திரைப்படத்தில் ரஜினி-கமல் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனராம். இத்திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனமும் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளதாம். இதற்கான பேச்சு வார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

இச்செய்தி வெளிவந்ததில் இருந்து இணையத்தில் நெட்டிசன்கள் இந்த புராஜெக்ட் குறித்தே பேசி வருகின்றனர். அந்த வகையில் இத்திரைப்படத்தை குறித்து பிரபலம் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில்  பதிவிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

அதாவது பிரபல மூத்த பத்திரிக்கையாளரான பிஸ்மி, தனது எக்ஸ் தளத்தில் “46 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையவுள்ளார் கமல்ஹாசன்” என “அலாவுதீனும் அற்புத விளக்கும்” திரைப்படத்தில் ரஜினியும் கமலும் இணைந்து இடம்பெற்றிருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இப்பதிவு இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும், “நிச்சயம் இந்த பிராஜெக்ட் டேக் ஆஃப் ஆகிவிடும்” என குஷியில் உள்ளனர். 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!