எனக்கு இவ்வளவு கோடி பத்தாது, பெருசா தாங்க- ரஜினி கேட்ட சம்பளத்தால் ஆடிப்போன கலாநிதி மாறன்
Author: Prasad6 August 2025, 11:32 am
அரங்கம் அதிர வெளியாகும் கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. வெளிநாடுகளில் இத்திரைப்படத்திற்கான முன்பதிவு தொடங்கிவிட்ட நிலையில் டிக்கெட்டுகள் மளமளவென விற்றுத் தீர்ந்து வருகின்றன.

ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் இணையும் திரைப்படம் என்பதால் இத்திரைப்படத்தை குறித்துதான் தற்போது எங்கு திரும்பினாலும் பேசப்பட்டு வருகிறது. இத்திரைப்படம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வெளியாகும் முன்பே ரூ.500 கோடிக்கு ஏற்கனவே வியாபாரம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு படம் வெளியாவதற்கு முன்பே ரூ.100 கோடிக்கு மேல் லாபம் பார்த்துள்ளது.
ரஜினிகாந்த் கேட்ட சம்பளம்
இந்த நிலையில் ரஜினிகாந்த் “கூலி” திரைப்படத்திற்காக கேட்ட சம்பளம் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது முதலில் இத்திரைப்படத்திற்காக ரஜினிகாந்திற்கு ரூ.150 கோடி சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததாம். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ரூ.25 கோடி முன்பணம் வாங்கிக்கொண்டாராம் ரஜினிகாந்த். இந்த நிலையில் தற்போது தனக்கு ரூ.200 கோடி சம்பளம் வேண்டும் என ரஜினிகாந்த் கேட்கிறாராம். இதனால் கலாநிதி மாறன் ஸ்தம்பித்துப்போயுள்ளாராம்.

“கூலி” திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ள நிலையில் இத்திரைப்படம் ரூ.1000 கோடி வசூலாகுமா? என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த நிலையில்தான் ரஜினிகாந்த் ரூ.200 கோடி சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
