Happy Birthday ரஜினிகாந்த்.. ஹோலி கொண்டாடிய சூப்பர் ஸ்டாரின் கலர்ஃபுல் புகைப்படங்கள்..!

Author: Vignesh
26 March 2024, 11:09 am

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். 80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.

rajinikanth

70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை.

rajinikanth

முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கும் ஹோலி பண்டிகைக்கும் ஒரு முக்கிய சம்பந்தம் இருக்கிறது. இதே நாளில் தான் சிவாஜி ராவ் என்ற அவரது பெயரை இயக்குனர் கே பாலச்சந்தர் ரஜினிகாந்த் என மாற்றி வைத்தார். அதனால், ரஜினிகாந்த் என்ற பெயருக்கு ஹோலி பண்டிகை அன்று தான் பிறந்தநாள். இந்த நாளை ரஜினிகாந்த் டே என ரசிகர்களும் கூறி வருகின்றனர். தற்போது, வீட்டில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள்களின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

rajinikanth

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!