“நான் பார்த்து வளர்ந்த பையன் விஜய்”… ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு!

Author: Rajesh
27 January 2024, 10:27 am

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் திருவண்ணாம மும்பை உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் ரோலில் என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.

vishnu vishal -updatenews360

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச்சில் ரஜினி பேசிய விஷயங்கள் பெரும் சர்ச்சையாக வெடித்தது. அவர் சொன்ன அந்த காக்கா கழுகு கதை விஜய்க்கு தான் கூறுகிறார் என விஜய் ரசிகர்கள் கொந்தளித்தனர்.

இந்நிலையில் தற்போது லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் விஜய் குறித்து பல விஷயங்களை பேசினார். ” விஜய் நான் பார்த்து வளர்ந்த பையன்: விஜய் என் கண்ணுக்கு முன்னாடி வளர்ந்த பையன். தர்மத்தின் தலைவன் படத்தின் சூட்டிங் சமயத்தில் விஜய்க்கு 13 வயசு இருக்கும்.. மாடியில நின்னுட்டு என்னை பாத்துட்டு இருக்காரு.

ஷூட் முடிந்த உடனே சந்திரசேகர் என்கிட்ட அழைத்து வந்து என்னோட பையன் சார். ஆக்டிங்ல இன்ட்ரஸ்ட் இருக்குன்னு சொல்லி அறியமுகம் செய்து வைத்தார். நான் உடனே படிக்க சொல்லுங்க. படிச்சிட்டு வந்து நடிக்கலாம்னு அட்வைஸ் பண்ணேன். இப்போ நான் விஜய்க்கு ஒரு சிறந்த முன்னோடியாக தான் இருக்கிறேன்.

விஜய் தன் முயற்சியால் நடிகர் ஆகி அதன் பிறகு ஸ்டெப் பை ஸ்டெப்பா வளர்ந்து தன்னுடைய கடினமான உழைப்பால் இந்த இடத்துக்கு வந்து நிற்கிறார். அடுத்த அரசியலுக்கு செல்ல உள்ளார். இதில் எனக்கும் விஜய்க்கும் போட்டின்னு சொல்றதெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு.

அவ்வளவு ஏன் விஜய்யே சொல்லி இருக்காரு எனக்கு நான் தான் போட்டி என்று. எனவே எங்களுக்குள் எந்த போட்டியும், பொறாமையும் இல்லை. தயவு செய்து இப்படி எல்லாம் தவறாக புரிந்துக்கொண்டு பரப்ப வேண்டாம் என ரஜினி கேட்டுக்கொண்டார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!