தலைக்கனத்தில் ஆடிய இளையராஜா… ஒரே ஒரு வார்த்தையில் மூக்கை உடைத்த ரஜினிகாந்த்.. வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
12 December 2022, 11:02 am

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்ற பங்கு இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு உண்டு. அதே போல் தனது நடிப்பு, ஸ்டைல் மூலமாக தமிழ் சினிமாவை உலகமே வியந்து பார்க்க வைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவ்விருவர்கள் சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் நண்பர்கள், சாமி என்று தான் இருவரும் அடைமொழி வைத்து அழைப்பவர்.

இந்த நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது ரஜினிகாந்தின் வள்ளி படத்திற்கு இளையராஜா இசையமைத்த பாடல்கள் குறித்து பேசப்பட்டது.

நடிகை சுஹாசினி வள்ளி படத்தில் இளையராஜா போட்ட பாடல்கள் எல்லாம் சூப்பர்ஹிட் என புகழ்ந்து தள்ளினார். அதற்க்கு இளையராஜாவும் மகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டே இருந்தார். இந்நிலையில், இடையே பேசிய ரஜினிகாந்த் வள்ளி படத்திற்கு இளையராஜா இசையமைக்கவில்லை, அவருடைய மகன் கார்த்திக் ராஜா தான் இசையமைத்தார் என்று கூற இளையராஜாவின் முகம் சுருங்கிப்போனது.

அனைவரும் இதை அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். வள்ளி படத்திற்கு கார்த்தி ராஜா இசையமைத்திருக்கும் பட்சத்தில், அப்படத்திற்கு இசையமைப்பாளர் என இளையராஜா தன்னுடைய பெயர் தான் போட்டுள்ளார். இதை தற்போது நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

  • anandraj shared his feelings about deleted his scenes in bigil movieஇது கூட பண்ணலைன்னா நீங்க இயக்குனரா?- அட்லீயை கண்டபடி கேட்ட ஆனந்த்ராஜ்!