“ரஜினி சொன்ன காக்கா விஜய் தான்” பல கோடி செலவு பண்ணி மொக்கை வாங்கிய தளபதி!

Author: Shree
2 November 2023, 1:22 pm

நடிகபிர் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியான திரைப்படம் லியோ. சுமார் ரூ. 300 கோடியில் உருவான இத்திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 550 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றிவிழா மிக பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்த வெற்றி விழாவில் நடிகர் விஜய், த்ரிஷா, மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மரியம் ஜார்ஜ், ‘பிக் பாஸ்’ ஜனனி, மேத்யூ தாமஸ், மடோனா செபாஸ்டியன் மற்றும் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், கலை இயக்குநர் சதீஷ் குமார், இயக்குனர் ரத்தினகுமார் , நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

இவ்விழாவில் பேசிய இயக்குனர் ரத்தினகுமார், ” நான் சின்ன வயசில் இருந்தே விஜய்யின் தீவிர ரசிகன். மாஸ்டர் படத்தில் வாத்தி ரெய்டு பாடல் எழுதியபோதே உண்மையிலே நெய்வேலியில் ரைட் வந்துவிட்டார்கள். இப்போ லியோ படத்தின் ” நா ரெடி தான் வரவா” பாடல் வெளியானதும் எவ்வளவு பிரச்சனை கிளம்பிவிட்டார்கள் என்பது உங்களுக்கே தெரியும்.

விஜய் மற்றவர்கள் போன்று இல்லை. அவர் மிகவும் தாழ்மை குணம் கொண்டவர். யாரையும் நிற்கவைத்து பேசவே மாட்டார். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என எப்போதும் வித்தியாசம் பார்க்கவே மாட்டார். அவருக்கு எல்லோருமே சரிசமம் ஆனவர்கள். எனவே “எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தானே ஆக வேண்டும்” என்று ரத்ன குமார் பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

ரத்தினகுமாரின் இந்த பேச்சை சமூகவலைத்தளங்களில் மிகவும் மோசமாக விமர்சித்து வரும் ரஜினி ரசிகர்கள், அப்போ “ரஜினி சொன்ன காக்கா விஜய் தான்” என்று நீங்களே ஒதுக்கிட்டீங்களா? என ட்ரோல் செய்து தள்ளியுள்ளனர். அதுக்காகவா இத்தனை கோடி செலவு பண்ணி சக்ஸஸ் மீட் நடத்துனீங்க? அட சைக்…. என்றெல்லாம் பங்கமாக கலாய்த்து தள்ளியுள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!