அனிருத்துக்கு மருத்துவ முத்தம்…. நெல்சனுக்கு கட்டிப்பிடி வைத்தியம் – சந்தோஷத்தில் கொப்பளித்த சூப்பர் ஸ்டார்!

Author: Shree
29 July 2023, 1:00 pm

பீஸ்ட்’ படத்தின் இயக்குனர், நெல்சன் திலீப் குமார் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வரும் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை, சன் பிச்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளது. நெல்சன் திலீப்குமார் ரஜினியுடன் இணையும் முதல் படம் இதுவாகும்.

Jailer - Updatenews360

இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் தான் இசையமைத்துள்ளார். ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்கிற கேரக்டரில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைந்துவிட்டது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இப்படத்தின் இசைவெளியீட்டு மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், தயாரிப்பாளர்கள் கலாநிதி மாறன், இசையமைப்பாளர் அனிருத், நடிகர் ஜாக்கி செராப், நடிகை தமன்னா, ரம்யா கிருஷ்ணா, யோகி பாபு, நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

jailer - updatenews360

இந்த நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், செம மாஸாக கரகோஷங்களால் அரங்கமே அதிர அங்கிருந்த அனைவரின் கைதட்டல் சத்தத்துடன் வந்து மாஸ் காட்டினார். அப்போது நெல்சனை பார்த்ததும் கட்டி பிடித்து அரவணைத்து பாசத்தை வெளிப்படுத்தினார். மேலும் அனிருத்துக்கு முத்தம் கொடுத்து மகழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாக நெட்டிசன்ஸ், ” அனிருத்துக்கு மருத்துவ முத்தம் நெல்சனுக்கு கட்டிப்பிடி வைத்தியம் என மீம்ஸ் போட்டுத்தள்ளியுள்ளனர்.

  • lokesh kanagaraj introduce as a hero in upcoming film லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!